Bigg boss Tamil: ரஞ்சித்துக்கு அந்த இடத்தில் விழுந்த பயங்கர அடி... இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லையா தர்ஷா..!
விளையாட்டுல இதெல்லாம் சகஜமப்பா... அதுக்காக இப்படியா பண்ணுவீங்க?
பிக்பாஸ் சீசன் 8ல் டாஸ்க்குகள் ரொம்பவே ஸ்பீடு எடுத்துள்ளன. நேற்று நடந்த போட்டியின்படி நாமினேஷனுக்காக ப்ரீ டிக்கெட் பெறணும்னா டாஸ்க்ல வின் பண்ணனும். எந்த அணி ஜெயிக்கிறதோ அவங்களுக்குக் கொடுக்கப்படும். இது தான் பிக்பாஸோட அறிவிப்பு.
ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் தயாராக இருந்தனர். கார்டன் ஏரியா பரபரப்பானது. கருப்பு கலரில் உள்ள காயினை எடுத்து அடுத்தவங்களோட முதுகுல ஒட்டணும். அப்போ பர்சர் அடிக்கும். அந்த நேரத்துல காயின் யார்கிட்ட இருக்கோ அவங்க அவுட். அது முதுகுல இருந்தாலும் அவுட்.
5 தடவை பர்சர் அடிக்கும். கடைசில எந்த டீம்ல நிறைய பேர் இருக்காங்களோ அவங்க வின்னர். போட்டியாளர்கள் பரபரப்பாக விளையாடினர். ஆண்கள், பெண்களின் முதுகில் காயினை துரத்தி துரத்தி ஒட்டினர். கடைசியில் தர்ஷா குப்தா மட்டும் பாக்கி.
அவர் ஆண் போட்டியாளர்களிடம் இருந்து காயினை பிடுங்கி ஒட்டணும். எல்லாரும் மொத்தமா கீழே விழுறாங்க. அவங்கக்கிட்ட காயினை வாங்கும் சண்டையில ரஞ்சித்தும் விழுறாரு. அப்போ அவர் மேல தர்ஷா ஏறி மிதிச்சிடுறார். அதுவும் கரெக்டா அந்த இடத்துல அதாவது மர்ம உறுப்புல போயி மிதிச்சிடுறாரு.அவர் வலியில் கத்துறாரு. உடனே காலை எடுக்குற தர்ஷா என்ன செய்றோம்னு தெரியாமலேயே திரும்ப திரும்ப அதே இடத்தில் மிதிச்சிடுறாரு.
3 முறை தொடர்ந்து மிதிச்சதால ரஞ்சித்துக்கு சரியான வலி. அந்த இடத்தில் ஐஸ்கட்டி ஒத்தடம் போடுறாரு.
அந்த விஷயம் அருணுக்குத் தெரிய அவர் தர்ஷாவிடம் மல்லுக்கு நிற்கிறார். உனக்கு அந்த காயின்தான் முக்கியமா? நீ எந்த இடத்தில மிதிச்சிருக்க தெரியுமா?அதுல மிதிக்காதன்னு சொன்ன பிறகும் நீ மதிச்சிருக்க? விளையாடுறதுக்காக இப்படித் தான் செய்வீங்களான்னு எகிறி இருக்கிறார்.
வரும் வாரம் மக்கள் செல்வன் என்ன தீர்ப்பு சொல்லப் போறாருன்னு பார்க்கலாம். அப்படின்னா இந்த வாரம் தீபாவளி வாரம். இந்த விஷயம் வேறு சூடுபிடிக்கும் களைகட்டும் பிக்பாஸ் வீடு.