Biggboss Tamil: அருண் பிரசாத் காதலி விஷயத்தை உடைத்த விஜே விஷால்.. இதானே நாங்களும் சொன்னோம்…

அருண் பிரசாத் பிக்பாஸுக்குள் வரும் போது அவருக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்தது

By :  Akhilan
Update: 2024-10-31 10:23 GMT

BiggBossTamil: பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக இருக்கும் அருண் பிரசாத் காதலி குறித்து விஜே விஷால் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் மிகப் பிரபலமாக இருந்து வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது பிக் பாஸ் தான். முதல் ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த சீசனில் நடந்த சில கோளாறுகள் அவருக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இந்த சீசன் தொடக்கத்திலேயே அவர் வெளியேற அவருக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி தற்போது எட்டாவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். எப்போதும் போல இல்லாமல் இந்த சீசனில் நிறைய சின்னத்திரை நடிகர்கள் உள்ளே வந்துள்ளனர்.

அதில் முக்கிய போட்டியாளராக முதல் ஆளாக தேர்வு செய்யப்பட்டது அருண் பிரசாத் என கூறப்படுகிறது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அருண் பிரசாத் தற்போது வரை பெரிய அளவில் கன்டென்ட் கொடுக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

அமைதியாக பேசிக்கொண்டு இருக்க இடம் தெரியாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தீபாவளி எபிசோடில் அவருக்கு மாலை அணிவித்து பலர் வாழ்த்து சொன்னார்கள். அதில் நல்ல பொண்ணு கிடைக்க வேண்டும் என முத்து குமரன் கூற விஷால் பொண்ணு எல்லாம் வந்தாச்சு.

பையன் சோ முடிச்சு வெளியில வருவார். ஏழாவது இடத்தில் இருக்க பொண்ணுக்கும் எட்டாவதுல இருக்க பையனுக்கும் விரைவில் கல்யாணம் முடியும் என சூசகமாக தெரிவித்து இருப்பார். ஏழாவது சீசனின் டைட்டில் வின்னரான அர்ச்சனா அருண் பிரசாத்தின் காதலி என கூறப்படுகிறது.

இருவரும் பல இடங்களில் ஒன்றாக சென்றதற்கான புகைப்படங்களும் இணையத்தில் கசிந்தது. அர்ச்சனா எனக்கு அவர் நெருங்கிய நண்பர்தான் என ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இது குறித்து அருண் தரப்பு இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News