கனவுக்கன்னி தர்ஷா குப்தாவை ஆம்பளையா மாத்திட்டீங்களே டா!.. பிக் பாஸ் பார்த்து ஷாக்கான ஃபேன்ஸ்!..

தர்ஷா குப்தா பாய்ஸ் டீமுக்கு இந்த வாரம் சென்றுள்ள நிலையில், அவரை ஆணாகவே போட்டியாளர்கள் மாற்றியுள்ளது ரசிகர்களை ஆச்சர்யமடைய செய்துள்ளது. இந்த வாரம் தர்ஷா பர்ஃபார்ம் செய்வார் என எதிர்பார்க்கலாம்.

By :  saranya
Update: 2024-10-14 16:30 GMT

பிக் பாஸ் 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் பிக் பாஸ் முதல் சீசனை கமல் தொகுத்து வழங்கும் போது ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆர்வத்துடன் பார்த்தார்களோ அந்த அளவுக்கு ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

வார நாட்களும் வார இறுதி நாட்களும் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கூட போரடிக்காமல் விறுவிறுப்பாக போட்டியாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருவதை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

முதல் வாரம் ஆண்கள் அணிக்குள் ஒரு பெண்ணாக பவித்ரா ஜனனி சென்று வந்தார். பெண்கள் அணியில் ஒரு ஆணாக முத்துக்குமரன் சென்றிருந்தார். பவித்ரா ஜனனி ஆண்கள் அணி நடத்திய பிராங்க் டிராமாவில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

போன வாரமே தர்ஷா குப்தா செல்கிறேன் என சொல்லும்போது தலைவராக இருந்த தர்ஷிகா மற்றும் மற்ற பெண்கள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், இந்த வாரம் தர்ஷா குப்தாவை அனுப்பியுள்ளனர்.

தர்ஷா குப்தாவை ஆண்கள் அணியினர் தர்ஷன் என ஆணாகவே மாற்றி அழைத்து கொண்டு சென்றது ரொம்பவே ரசிக்கும் படி மாறியுள்ளது. ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 3ல் தர்ஷன் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த தர்ஷா குப்தாவையே இந்த வாரம் ஆணாக மாற்றி விட்டீர்களே அவர் எங்களுடைய தலைவிடா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த வாரமாவது தர்ஷா குப்தா பர்ஃபார்ம் செய்து தன்னுடைய ஆர்மியை அதிகப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தர்ஷா குப்தா, ஜாக்குலின் எல்லாம் கிராண்ட் ஃபினாலே வரை இருப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News