ரஞ்சித் ஆர்வக்கோளாறு இல்ல!. எப்ப அடிக்கணும்னு அவருக்கு தெரியும்!.. களத்தில் இறங்கிய பிரியா ராமன்!...
ரஞ்சித் பிக்பாஸ் விளையாட்டு சூடுபிடித்து இருக்கிறது.
Ranjith: நடிகை பிரியா ராமன் தன்னுடைய கணவர் ரஞ்சித் குறித்து அவருடைய பிக் பாஸ் விளையாட்டு குறித்தும் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்தவர் பிரியா ராமன். அவருடைய கணவரும் நடிகருமான ரஞ்சித் தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். முதல் வாரத்தில் அவர் நடிப்பதாக பலர் குற்றம் சாட்டினர்.
ஆனால் அந்த வாரம் அவர் ரசிகர்களின் ஆதரவுடன் காப்பாற்றப்பட்டார். தொடர்ந்து அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடி வரும் ரஞ்சித் சக போட்டியாளர்களிடம் போலியாக நடந்து கொள்வதாக கூறப்பட்ட வருகிறது. ஆனால் அவருக்கு இணையத்தில் தொடர்ந்து ஆதரவு நிலவி வருகிறது.
இந்நிலையில் அவருடைய மனைவி பிரியா ராமன் சமீபகாலமாக ரஞ்சித்தை ஆதரித்து பேட்டி கொடுத்து வருகிறார். தன்னிடம் இரண்டு ஏஜென்சிகள் அவருக்கு பி ஆர் வேலை செய்ய நாடிய விஷயத்தையும் கூறி ரசிகர்களை அதிர்ச்சியடை செய்தார்.
எங்களுக்கு இருக்கும் பிரபலமே போதும். இதை காசு கொடுத்து வாங்கும் அவசியம் எங்களுக்கு இல்லை. நான் ரஞ்சித்தை விற்க மாட்டேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில் ரஞ்சித் ஆர்வக்கோளாறு கிடையாது.
அவருக்கு எங்கு எப்போது அடிக்க வேண்டும் என சரியாக தெரியும். அந்த நேரத்தில் அதை அவர் பயன்படுத்திக் கொள்வார். சமீபத்தில் கூட அவரும் ஜாக்லினும் செய்த தந்தை மகள் பெர்பாமன்ஸ் பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. ரஞ்சித்திற்கு அவருடைய தாய் மீது தான் கொள்ளை பிரியம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.