காசில்லாமல் தவித்த எம்.ஜி.ஆர்... சின்னப்ப தேவரின் செயலால் ஆச்சரியத்தில் அதிர்ந்த சுவாரஸ்ய பின்னணி

கோடிகளில் வலம் வந்த எம்.ஜி.ஆர் ஒரு காலத்தில் அரிசிக்கே இல்லாத நிலையில் இருந்தார். அப்போது எதையும் யோசிக்காமல் சின்னப்ப தேவர் செய்த உதவியினை கடைசி வரை மறக்காமல் இருந்தாராம் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தயாரிப்பாளரில் ஒருவராக இருந்தவர் சின்னப்ப தேவர். அவருக்கு தொடர்ச்சியாக 16க்கும் அதிகமாக படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் கடந்தகாலத்தில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம். ஒருநாள் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா வீட்டு வாசலில் நின்று […]

By :  Akhilan
Update: 2022-10-22 06:39 GMT

எம்.ஜி.ஆர்

கோடிகளில் வலம் வந்த எம்.ஜி.ஆர் ஒரு காலத்தில் அரிசிக்கே இல்லாத நிலையில் இருந்தார். அப்போது எதையும் யோசிக்காமல் சின்னப்ப தேவர் செய்த உதவியினை கடைசி வரை மறக்காமல் இருந்தாராம் எம்.ஜி.ஆர்.

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆரின் ஆஸ்தான தயாரிப்பாளரில் ஒருவராக இருந்தவர் சின்னப்ப தேவர். அவருக்கு தொடர்ச்சியாக 16க்கும் அதிகமாக படங்களில் எம்.ஜி.ஆர் நடித்து கொடுத்திருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் கடந்தகாலத்தில் ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

சின்னப்ப தேவர்

ஒருநாள் எம்.ஜி.ஆரின் தாயார் சத்யபாமா வீட்டு வாசலில் நின்று எம்.ஜி.ஆருக்கு காத்துக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த சின்னப்ப தேவர். என்னம்மா நீங்க வெளியிலில நின்னுட்டு இருக்கீங்க எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு, எம்.ஜி.ஆரின் தாயார் சாப்பாட்டு அரிசியே இல்லடா. வரும் போது வாங்கி வருவதாக எம்.ஜி.ஆர் கூறினான். இன்னும் ஆள காணும். அவனை தான் எதிர்பார்த்து நிற்கிறேன் என்றாராம். சின்னப்ப தேவருக்கோ கவலையாகி இருக்கிறது.

உடனே வீட்டிற்கு ஓடியவர். தனது கால்சட்டையில் அதிகளவில் அரிசியினை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆர் வீட்டிற்கு ஓடி இருக்கிறார். முறத்தை எடு ஆத்தா என சத்யபாமாவிடம் கூறினாராம். அவரும் முறத்தினை எடுத்து வைக்க அரிசியினை அதில் கொட்டினாராம். உனக்கு ஏதுப்பா இவ்வளவு அரிசி எனக் கேட்க வீட்டில் தான் எடுத்து வந்தேன். சமைங்க, தம்பி வந்திருவான்ல எனக் கூறி சென்றாராம்.

எம்.ஜி.ஆர்

காசில்லாமல் வீட்டிற்கு வந்த எம்.ஜி.ஆர் அரிசி உலையில் இருப்பதை பார்த்திருக்கிறார். எப்படிமா என தாயாரிடம் கேட்டார். அவர் சின்னப்ப தேவர் தான் கொடுத்திட்டு போனாம் என்பதை கூறி இருக்கிறார். அன்றிலிருந்து எம்.ஜி.ஆர் சின்னப்ப தேவருக்கு நெருக்கமாகி விட்டாராம். இதை தொடர்ந்தே தன்னுடனே சின்னப்ப தேவரை வைத்துக்கொண்டு அவர் நிறுவனத்திற்கே தொடர்ந்து படம் நடித்தும் வந்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News