நடுராத்திரியில் கதவைத் தட்டிய ரஜினி... ஆச்சரியத்தில் உறைந்து போன பிரபுதேவா..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பிரபுதேவா என்ன சொல்றாருன்ன பாருங்க...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பல படங்களுக்கு கோரியோகிராபராக பிரபுதேவா பணியாற்றியுள்ளார். அதுல ஒண்ணுதான் சிவாஜி. ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது படப்பிடிப்பு ஸ்பெயின்ல நடக்க இருந்தது. இதற்காக அங்கு சென்ற போது ஒருநாள் இரவில் தனது உதவியாளர் விஷ்ணுவுடன் ஆலோசனையில் இருந்தார் பிரபுதேவா.
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்கவே விஷ்;ணு போய் கதவைத் திறந்து பார்த்துள்ளார். அவருக்கு ஒரே ஆச்சரியம். 'சார் சார் சார்'னு சொல்லிக்கிட்டே இருந்தாராம். 'எதுக்கு இத்தனை சார் போடுறாரு...?'ன்னு பிரபுதேவா போய்ப் பார்த்துள்ளார். அங்கு ரஜினி நின்று கொண்டு இருந்தாராம்.
அப்போது ரஜினி 'விஷ்ணுவ என்னோட அறைக்கு அனுப்பி வைக்கிறீங்களா... நாளைக்கு என்னோட பாட்டு சூட்டிங் இருக்கு. அதுக்கு ரிகர்சல் பார்க்கணும்' என்று தெரிவித்துள்ளார். உடனே 'இதுக்குப் போய் நீங்க ஏன் சார் வந்தீங்க.? ஒரு போன் போட்டுருக்கலாமே... நானே வர்றேன்'னு சொல்லி இருக்கிறார் பிரபுதேவா. 'இல்ல வேணாம். நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் விஷ்ணுவை அழைச்சிட்டுப் போறேன்'னு சொன்னாராம் ரஜினிகாந்த்.
இன்று அவரு பெரிய சூப்பர்ஸ்டாரா இருக்காருன்னா அதுக்கு எல்லாம் அவரோட இந்த எளிமை தான் முக்கிய காரணம். அவரு என்னை வந்து அறைக்கு வந்து அழைப்புமணியை அடிச்சிப் பார்க்கணும்கற அவசியமே இல்லை. உதவியாளர்கிட்ட சொல்லி என்னை வரச்சொல்லி இருக்கலாம்.
இன்னொன்னு மறுநாள் தன்னோட பாடல் காட்சில நல்லா ஆடணுமே என்ற ஆர்வம் வரணும்கறதுக்காக நைட்டா இருந்தாலும் ரிகர்சல் பார்க்கணும்னு அவர் எடுக்குற முயற்சி... இதெல்லாம் சேர்ந்து தான் அவரை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்துருக்கு. அவருக்கிட்ட கத்துக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்குன்னு பிரபுதேவா சொன்னாராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
2007ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் சிவாஜி. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் மாஸ் ரகங்கள். ரஜினிகாந்துடன் ஸ்ரேயா, சுமன், விவேக், மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஏவிஎம் தயாரித்த படம். கதையை ஷங்கருடன் இணைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதியுள்ளார். கே.வி.ஆனந்தின் ஒளிப்பதிவு அருமை. இந்தப் படத்தில் தான் பல்லேலக்கா, ஸ்டைல், வாஜி வாஜி, அதிரடி, சகானா, த பாஸ் ஆகிய ஸ்டைலிஷான பாடல்கள் உள்ளன.