ஓவர் சீன் போட்ட மிஷ்கின்… பாடல் வரிக்கு பங்கம் பண்ணிய பிரபலத்தின் குடும்பம்… அடுத்து நடந்ததுதான்?
மிஷ்கினின் பாடல் எல்லாமே ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக அமையும்
Mysskin: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான மிஷ்கின் ரொம்பவே கறாரான பேர்வழி தான். ஆனால் தான் தப்பு செய்துவிட்டால் யோசிக்காமல் மன்னிப்பு கேட்பார் என்பது சமீபத்தில் வைரலாகி வரும் வீடியோவில் இருந்து தெரிய வந்திருக்கிறது.
கோலிவுட்டில் சித்திரம் பேசுதடி படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். தொடர்ந்து அஞ்சாதே, யுத்தம் செய், முகமூடி, பிசாசு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கியிருக்கிறார். இதன் மூலம் ரசிகர்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.
ஒரு பக்கம் இயக்கத்தில் கவனம் செலுத்தி வந்த மிஷ்கின் நடிக்கவும் தொடங்கினார். குணச்சித்திர வேடத்தில் அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் லைக்ஸ் குவித்தது. தற்போது இயக்கம் மற்றும் நடிப்பு என இரண்டிலுமே கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் குறித்து இவருக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானது. இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டனர். மிஷ்கின் விஷாலை தன்னுடைய மகனாக நினைத்தேன் அவர் என்னை ஏமாற்றிவிட்டதாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.
இதில் சிலர் விஷாலுக்கும் பலர் மிஷ்கினுக்கும் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மிஷ்கின் கோபக்காரர் என்று தான் கோலிவுட்டில் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார். ஆனால் தான் செய்த ஒரு தவறுக்காக தானே முன்வந்து அவர் மன்னிப்பு கேட்ட விஷயம் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.
இவர் இயக்கிய அஞ்சாதே திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அப்படத்தில் பிரசன்னா, அஜ்மல், நரைன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். சுந்தர் சி பாபு இசையமைத்த இப்படத்தில் கபிலன் கண்ணதாசன் காரைக்குடி பாடலை எழுதியிருப்பார். இந்த பாடலை மிஷ்கின் பாடியிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் உயரிய கலைஞரான கண்ணதாசனை இப்படி ஒரு பாடலில் இணைத்தது அவரின் குடும்பத்திற்கு மிகப்பெரிய மனவருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உடனே பட குழுவிற்கு நோட்டீசும் விட்டனராம். தொடர்ந்து அதை வழக்காக பதிவு செய்ய முடிவு எடுக்கும் போது மிஷ்கினை தானாக கால் செய்து தான் தவறு செய்து விட்டதாகவும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேசியதால் அதை விட்டுவிட்டதாக கண்ணதாசனின் மகன் தெரிவித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.