இந்தப் படத்தில் நடிக்காம போயிட்டோமே?!.. வாழ்நாள் முழுவதும் ஜெமினியை வருத்தப்பட வைத்த படம்

ஒரு சிறந்த கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போக ஜெமினி கணேசன் வறுத்தப்பட்ட சம்பம் பற்றி பார்ப்போம்.

By :  Admin
Update: 2024-09-20 01:30 GMT

ஜெமினி        

60களில் தமிழ் திரைத்துறையில் காதல் மன்னனாக மக்கள் மனதில் பதிந்தவர் நடிகர் ஜெமினி கணேசன். மும்மூர்த்திகளாக எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என தனக்கென ஒரு கோட்டை அமைத்துக் கொண்டு சினிமாவில் ஆட்சி செய்து வந்தனர். வீர வசனங்களை பேசுவதற்கு எம்ஜிஆர் , செண்டிமெண்ட்டாக நடிக்க சிவாஜி, காதல் படங்களில் நடிக்க ஜெமினி என இவர்கள்தான் ஒரு ரவுண்ட் வந்தனர்.

அந்த காலத்தில் ஜெமினி ஒரு பிளே பாயாகவும் வலம் வந்திருக்கிறார். சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னே ஜெமினி திருமணமானவர். சினிமாவில் நடித்த பிறகு நடிகை சாவித்ரியை காதலித்தார். அது கோலிவுட்டில் அனைவருக்கும் தெரிய அதன் பிறகு சாவித்ரியை திருமணமும் செய்து கொண்டார். இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் மிக அன்பாக இருந்திருக்கிறார்கள்.

சாவித்ரி சில சமயங்களில் கோபப்பட்டாலும் ஜெமினிதான் பொறுத்துபோவாராம். இவர்கள் காதலின் ஆழத்தை அருகில் இருந்து பார்த்தவர் இயக்குனர் ஸ்ரீதர். ஸ்ரீதர் முதன் முதலில் கல்யாண பரிசு படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்தில் நடித்தது ஜெமினி.

முதல் படம். அதுவும் ஜெமினி ஹீரோ என்ற போது ஸ்ரீதருக்கும் ஜெமினிக்கும் ஒரு இணக்கமான நட்பு உருவாகியிருக்கிறது. அந்த நேரத்திலேயே ஜெமினி சாவித்ரியை மிகத்தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்தாராம். அதனால் அவர்கள் காதல் எப்படிப்பட்டது என ஸ்ரீதருக்கும் தெரிந்திருக்கிறது.

அதனால் இவர்கள் இருவரையும் வைத்து ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தை எடுக்கலாம் என திட்டமிட்டிருந்தாராம் ஸ்ரீதர். கல்யாண்குமார், தேவிகா இவர்களுக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது ஜெமினியும் சாவித்ரியும்தானாம். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர்கள் இருவராலும் அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

ஆனால் படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓட அந்தப் படத்தை பார்த்து ஜெமினி கணேசன் மிகவும் வருந்தினாராம். இந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதே என பல வருடங்கள் வருந்தியதாக ஸ்ரீதர் ஒரு பத்திரிக்கையில் தெரிவித்திருப்பதாக இந்த தகவலை பகிர்ந்த சித்ரா லட்சுமணன் கூறினார்.

Tags:    

Similar News