ஒரே படத்தில் இரு ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்த விக்ரம்... சாத்தியமானது எப்படி?

ச்சீயான் விக்ரம் நடிப்பில் மட்டுமல்ல. டப்பிங்கிலும் சூரப்புலி தான்.

By :  sankaran
Update: 2024-11-02 07:53 GMT

1997ல் பிரபுதேவா, அப்பாஸ், சிம்ரன், ரம்பா நடிப்பில் வெளியான படம் விஐபி. சபாபதி இயக்கியுள்ளார். படத்தின் இசை அமைப்பாளர் ரஞ்சித் பாரொட். எல்லாப் பாடல்களுமே விறுவிறுப்பாக இருக்கும். மயிலு மயிலு, மின்னல் ஒரு கோடி, ஈச்சங்காட்டுல முயல், நேற்று நோ நோ, இந்திரன் அல்லெ என்ற இந்தப் பாடல்கள் எல்லாமே ஆட்டம்போட வைக்கும் ரகங்கள்.

பாடலில் பிரபுதேவாவின் வேகமான நடன அசைவுகள் அக்கால இளைஞர்களை ரொம்பவே ரசிக்க வைத்தன. அதனால் தானோ என்னவோ அவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்றே அழைத்தனர். இந்தப் படத்தைப் பற்றிய ஒரு ஆச்சரியமான தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி உள்ளது. படத்தில் அப்பாஸ்சும், பிரபுதேவாவும் கதாநாயகர்களாக நடித்து அசத்தினர்.

இருவருக்கும் சமமாக ஸ்கோப் செய்யும் கேரக்டர்கள். இருவரின் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். அதே போல கவர்ச்சிப் போட்டியில் சிம்ரனும், ரம்பாவும் தனித்தனியாகக் கெத்துக் காட்டி இருப்பார்கள். ஒரே பாடலில் இருவரும் போட்டி போட்டு நடனமாடி அசத்தி இருப்பார்கள். மணிவண்ணன் 'சார் யு வாட் நேம்'னு ஓட்ட இங்கிலீஷ்ல கேட்பாரு. 'சந்தோஷ்'னு சொல்வாரு அப்பாஸ்.


'ரொம்ப நெருங்கி வாராரே'ன்னு சொல்ற மணிவண்ணன் 'அமெரிக்கா, இந்தியா யு வாட் பஸ்ல யு கம்மிங்னு கேட்பாரு. உடனே நான் எங்கேருந்து வர்றேன்னு தானே கேட்குறீங்க. அதானே. தமிழ்லயே கேளுங்க. இங்கிலீஷை ஏன் கொலை பண்றீங்க?'ன்னு கேட்பாரு. அப்பாஸ் அந்தக் குரலைக் கொஞ்சம் உற்றுக் கவனித்தால் விக்ரமின் வாய்ஸ் அப்படியே தெரியும். நீச்சல்குளத்தில் சிம்ரன் நீச்சல் அடிப்பார்.

கரையில் உட்கார்ந்து கொண்டு அதை ரசிப்பார் பிரபுதேவா. உடனே 'உங்க வீக் பாயிண்ட் தெரியும். இறங்கி வாங்க'ன்னு சிம்ரன் கூப்பிடுவார். 'நம்ம வீக் பாயிண்ட் தெரிஞ்சிருக்கும் போல இருக்கே'ன்னு பிரபுதேவா சொல்வார். 'நீ சரியான ஆம்பளையா இருந்தா என்கூட ஸ்விம் பண்ணவா... இல்ல நான் மேல வருவேன். கிஸ் பண்ணிட்டுப் போயிடுவேன்'னு சொல்வார்.

பிகினி உடையில் வரும் சிம்ரனைப் பார்த்ததும் 'ஏங்க டோட்டல் பாடியே ட்ரான்ஸ்பர் மாதிரி இருக்கு. டப்புன்னு தட்டுன்னா பத்திக்கும் போல இருக்கு... ரைட் ஹேண்ட் கொடுங்க'ன்னு சொல்வாரு. அந்தக் குரலில் சற்று வித்தியாசம் காட்டி இருப்பார் விக்ரம். அது பிரபுதேவாவுக்கு நல்லாவே மேட்ச் ஆகி இருக்கும். இப்படி விக்ரம் ஆரம்பகாலத்தில் பல ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்துள்ளார்.

ஜாதிமல்லி படத்தில் வினித்துக்கு இவர் தான் டப்பிங். காதல் தேசம் படத்தில் அப்பாஸ்சுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். அஜீத்துக்கும் டப்பிங் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமராவதி, பாசமலர்கள், உல்லாசம் படங்களில் விக்ரம் தான் அஜீத்துக்கு டப்பிங் கொடுத்துள்ளார். ஆனால் ஒரே படத்தில் இரு ஹீரோக்களுக்கு டப்பிங் கொடுத்தது தான் பெரிய ஆச்சரியம். இரண்டிலும் வித்தியாசத்தைக் காட்ட வேண்டுமல்லவா?

அந்த வகையில் நடிப்பில் மட்டுமல்ல. டப்பிங்கிலும் சூரப்புலி என நிரூபித்துவிட்டார் விக்ரம். விஐபி படத்தில் பிரபுதேவா, அப்பாஸ் இருவருக்குமே குரல் கொடுத்தது நடிகர் விக்ரம் தான். அந்தக் காலத்தில் பிரபுதேவா சொந்தக் குரல்ல பேசி நடிக்கல என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனும் வாசகரின் கேள்வி ஒன்றுக்கு இப்படி பதில் அளித்துள்ளார்.

Tags:    

Similar News