ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது!.. போனி ஆகாம கிடக்கும் கவினின் படங்கள் லிஸ்ட் இதோ!..

கவின் நடித்துள்ள புதிய படங்கள் விலை போகாமல் கிடக்கிறது.

Update: 2024-08-07 13:00 GMT

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் கவின். அதன்பின் சில திரைப்படங்களில் ஹீரோவின் நண்பர்களில் ஒருவராக நடித்தார். நட்புன்னா என்ன தெரியுமா படத்தில் ஹீரோவாக நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அப்போதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போனார். அந்த வீட்டில் நடன இயக்குனர் சாண்டியுன் சேர்த்து கவின் அடித்த லூட்டி ரசிகர்களை சிரிக்க வைத்தது. அவர்கள் இருவருக்காகவே பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தனர். மேலும், பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுடன் ரொமான்ஸ் செய்தார் கவின்.

ஆனால், இதற்கு லாஸ்லியாவின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க அந்த காதல் பிரேக்கப் ஆனது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் மீண்டும் வாய்ப்பு தேடினார். அப்படி கிடைத்த வாய்ப்புதான் லிஃப்ட். ஹாரர் படமாக வெளிவந்த இந்த படம் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

அதன்பின் வெளிவந்த படம்தான் டாடா. இந்த படத்தின் கதை இப்படத்தை வெற்றி அடைய செய்தது. மேலும், கவினும் சிறப்பாக நடித்திருந்தார். அதன்பின் கவின் நடித்த திரைப்படம்தான் ஸ்டார். இந்த படத்திற்கு அதிக அளவில் புரமோஷனும் செய்யப்பட்டது. இந்த படம் தமிழ் சினிமாவையே புரட்டிப்போடும் என பலரும் நினைத்தார்கள்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ‘ஏ’ சென்டர்களில் மட்டுமே இப்படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது. இந்த படத்தில் கவினை பல காட்சிகளில் பில்டப் செய்திருந்தனர். அதை ரசிகர்கள் ரசிக்கவில்லை. ஒருபக்கம், இயக்குனர் நெல்சனின் தயாரிப்பில் ‘ப்ளடி பெக்கர்’ படத்திலும் கவின் நடித்து முடித்துவிட்டார். இந்த படத்தில் அவர் பிச்சைக்காரனாக நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ப்ளடி பெக்கர் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிகொள்வதாக சொன்ன ஹாட் ஸ்டார் நிறுவனம் பேக் அடித்துவிட்டது. இத்தனைக்கும் விஜய் டிவியில் பல வருடங்கள் வேலை செய்தவர் நெல்சன். மேலும், ஸ்டார் படத்தின் ஓடிடி உரிமையும் இதுவரை விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News