முதல் கணவர் ரொம்ப நல்லவர்! இரண்டாது திருமணத்திற்கு பிறகு இப்படி சொல்றாரே ஸ்ருதிகா..

சீரியல் நடிகை ஸ்ருதிகா தான் ஏன் இரண்டாது திருமணம் செய்தேன் என்பதை கூறியிருக்கிறார்.

Update: 2024-08-07 13:00 GMT

சன் டிவியில் ஒரு சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரிதிகா. நாதஸ்வரம், குல தெய்வம், மகராசி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் லீடு ரோலில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். அதுவும் அவர் முதன் முதலில் நடித்த நாதஸ்வரம் சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

நாதஸ்வரம் சீரியலில் கோபியாக திருமுருகனுக்கும் மலராக ஸ்ரிதிகாவிற்கு இருந்த கெமிஸ்ட்ரி அனைவரையும் ஈர்த்தது. ஒரு கட்டத்தில் இருவரும் உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என்றெல்லாம் பேசி வந்தார்கள். ஆனால் அப்படி எல்லாம் இல்லை என ஒரு பேட்டியில் ஸ்ரிதிகா கூறினார்.

தற்போது ஸ்ரிதிகா நடிகர் ஆர்யனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மகராசி சீரியலில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். ஆர்யனுக்கும் இது இரண்டாது திருமணம். ஏற்கனவே ஆர்யன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்திற்கு ஸ்ரிதிகா தன் முதல் கணவருடன் வந்து கலந்து கொண்டாராம்.

வீட்டில் பெற்றோர்கள் பார்த்து ஸ்ரிதிகாவின் முதல் திருமணத்தை மிகவும் சந்தோஷத்துடன்தான் நடத்தியிருக்கிறார்கள். அதுவும் தன் முதல் கணவர் ரொம்ப நல்லவர் என்றும் அவர் மேல் நான் தவறே சொல்ல மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு எங்களுக்குள் சில விஷயங்களில் ஒத்து வரவில்லை. அது கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால் அது நாளுக்கு நாள் பெரிதாகி பிரச்சினைக்கு வழிவகுத்தது. அதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து பேசித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்றும் ஸ்ரிதிகா கூறினார்.

விவாகாரத்துக்கு பிறகு ஆர்யனின் ஒரு நல்ல தோழியாகத்தான் இருந்தேன். ஆர்யனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரச்சினை வரும் போதெல்லாம் நான் தான் பேசி சரி செய்வேன். ஆனால் அவர்களுக்குள் செட்டாகவில்லை. உடனே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர். மகராசி சீரியலில் நடிக்கும் போது நாங்கள் இருவரும் சேர்ந்து நிறைய ரீல்ஸ் போடுவோம்.

sriஅதை பார்த்து ரசிகர்கள் நீங்கள் கல்யாணம் பண்ணப் போறீங்களா? என்றெல்லாம் கேட்டனர். எங்கள் இரு வீட்டார்களும் இதைப் பற்றி பேச நாங்களும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்து இப்போது வாழ்க்கையில் ஒன்று சேர்ந்திருக்கிறோம் என ஸ்ரிதிகா கூறினார்.

Tags:    

Similar News