என்னையா கழட்டி விடுறீங்க!.. சூர்யா வைத்த செக்!.. எஸ்.கே. படத்திற்கு வந்த சிக்கல்!...
சூர்யாவுக்கு பதில் சிவகார்த்திகேயன். ஆனால் சூர்யா மனசு இன்னும் மாறலையே
சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்து அதற்கான வேலைகள் எல்லாம் ஆரம்பித்துவிட்டார்கள் என்று செய்திகள் வெளியானது. ஆனால் இப்போது புறநானூறு படத்திற்கு ஒரு புதிய சிக்கல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. சுதா கொங்கராவுடன் இணைந்து சூர்யா நடித்த சூறரை போற்று திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.
அதற்கான தேசிய விருதையும் பெற்றார் சூர்யா. படமும் தேசிய விருதை பெற்ற திரைப்படமாக அமைந்தது. அதிலிருந்தே சுதா கொங்கராவும் சூர்யாவும் நெருக்கமான நண்பர்களாக மாறினர். இதற்கிடையில் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக கூறப்பட்டு வந்தது.
அதுதான் புறநானூறு திரைப்படம் என்றும் சொல்லப்பட்டது. அந்தப் படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியாகி பெரும் பிரமிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதையாகத்தான் இந்த புறநானூறு திரைப்படம் அமைய இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதில் சூர்யா நடிப்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால் திடீரென புறநானூறு படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார் என்ற செய்தி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் ஹிந்தி எதிர்ப்பை ஊக்குவிக்கும் படம் புறநானூறு. ஆனால் ஹிந்தியிலும் இப்போது சூர்யா நடிக்க ஆரம்பித்துவிட்டார். அப்படி இருக்கும் போது புறநானூறு படத்தில் நடித்தால் சரி வராது என கருதி கூட சூர்யா விலகியிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.
அதனால் சூர்யாவுக்கு பதிலாக புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று திட்டவட்டமாக கூறினார்கள். ஆனால் இப்போது வந்த தகவலின் படி அது புறநானூறு என்ற பெயரில் வெளியாக வாய்ப்பில்லையாம். படத்தின் தலைப்பை மாற்ற இருக்கிறார்களாம்.
மற்றும் இந்த படத்தை ஆரம்பத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா விலகுவதால் 2டி நிறுவனம் தயாரிக்கவில்லை. அதனால் சூர்யா NOC கொடுத்துவிட்டார் என்று கூறி வந்தார்கள். ஆனால் சூர்யா இன்னும் NOC கொடுக்கவே இல்லையாம்.
அப்படி கொடுத்தால்தான் படத்தை ஆரம்பிக்கமுடியும். இதை பற்றி கோடம்பாக்கத்தில் சுதா கொங்கரா மேல் சூர்யாவுக்கு ஏதும் கோவமா? அல்லது நடைமுறை சிக்கல்கள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை என கூறிவருகிறார்கள்.