படத்துக்கு புரமோஷன் பண்ண போய் பேரு கெட்டுப்போச்சி!.. பிரசாந்த்துக்கு இது தேவையா?!..
அந்தகன் படத்துக்கு புரமோஷன் செய்ய போய் பெயரை கெடுத்து கொண்டிருக்கிறார் நடிகர் பிரசாந்த்..
வைகாசி பொறந்தாச்சி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் பிரசாந்த். தமிழில் பல திரைப்படங்களிலும் நடித்த தியாகராஜனின் மகன் இவர். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது.
இவருக்கு நிறை பெண் ரசிகைகளும் உருவானார்கள். பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்தார். ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்பா தியாகராஜா இயக்கத்திலும் சில படங்களில் நடித்தார்.
சொந்த வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில வருடங்கள் சினிமாவில் நடிக்கவில்லை. அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. இப்போது கோட் படத்தில் விஜயுடன் நடித்திருக்கிறார். அதாவது விஜயின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். விஜயுடன் சேர்ந்து நடனமெல்லாம் ஆடியிருக்கிறார்.
ஒருபக்கம், அப்பா தியாகராஜா இயக்கத்தில் அந்தகன் என்கிற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தில் பிரசாந்துடன் பிரியா ஆனந்த், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 9ம் தேதி வெளியாகவுள்ளது. எனவே, இப்படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சியில் பிரசாந்த் ஈடுபட்டிருக்கிறார்.
செய்தியாளர் சந்திப்புகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில்தான், ஒரு யுடியூப் சேனலுக்காக ஒரு பெண் தொகுப்பாளினி புல்லட்டின் பின்னால் உட்கார்ந்து கேள்விகள் கேட்க முன்னால் அமர்ந்து பிரசாந்த் பேசிக்கொண்டே சொல்லும் வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்த சம்பவம் சென்னை தி நகரில் நடந்தது. இந்நிலையில், ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியதற்காக பிரசாந்துக்காக தமிழக போக்குவரத்து துறை ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பின்னால் அமர்ந்து வந்த பெண்ணுக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.