ஆளவந்தானை வைத்து உருவான இங்கிலீஸ் படம்!.. ஹாலிவுட்டுக்கே சொல்லிக்கொடுத்த கமல்!...

By :  Akhilan
Update:2025-02-24 12:59 IST

Aalavandhan: தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் கேரியரினை எடுத்து கொண்டால் ஆளவந்தான் திரைப்படம் கண்டிப்பாக இடம்பெறும். அந்த திரைப்படத்தில் ரசிகர்களுக்கு தெரிய வேண்டிய முக்கிய தகவல்கள் அடங்கிய தொகுப்பு தான் இது.

2001ம் ஆண்டு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்க கமல்ஹாசனின் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ரவீனா டன்டன் மற்றும் மனிஷா சிறப்பு வேடத்தில் நடித்திருப்பார்.

முதலில் ரவீனா கேரக்டரில் நடிக்க இருந்தவர் சிம்ரன். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் நடிக்கவில்லை. மனிஷா வேடத்தில் ராணி முகர்ஜியிடம் பேச அவரும் நடிக்க முடியாமல் போனது.

இந்த படத்திற்கு இசை ஷங்கர்-எக்சன்–லாய் எனும் மூவர் கூட்டணி. இதே கூட்டணி பின்னாளில் கமல்ஹாசனின் நடிப்பில் விஸ்வரூபம் படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடித்தவர் அண்ணன் மகள் அனுஹாசன்.

ஒரு ஷூட்டிங்கில் கூட கமல் இருந்தால் நடிக்க மாட்டேன் என்றாராம். அவரை தனி தனியாக தான் ஷூட் செய்தார்களாம். ரவீனாவுக்கு டப்பிங் செய்தவரும் அனுதான். தமிழில் ஆளவந்தான், இந்தியில் "அபாய்" என்ற பெயரில் பல மாற்றங்களோடு ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் இப்படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார். 2001 ஆம் ஆண்டிற்கான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பிரிவில் தேசிய விருதை மதுசூதனன் என்பவர் ஆளவந்தான் படத்திற்காக வென்றார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் குவாண்டின் டாரண்டினோ இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான கில் பில் அனிமேஷன் சண்டை காட்சிகள் ஆளவந்தான் பார்த்தே எடுத்ததாக இயக்குனர் தெரிவித்து இருக்கிறார். இவ்வளவு பெருமை பேசப்படும் ஆளவந்தான் ரிலீஸான போது பக்கா தோல்வி அடைந்தது.

தயாரிப்பாளர் எஸ் தாணு இப்படத்தினை ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று பேசினார். மேலும் கமலின் நிர்வாண போஸ்டர்களும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News