டிராகன் படத்தின் 3 நாள் மொத்த வசூல் இவ்வளவு கோடியா?!. பிரதீப்பே சொல்லிட்டாரே!....

By :  Murugan
Update:2025-02-24 16:16 IST

Dragon: லவ் டுடே ஹிட்டுக்கு பின் ‘ஓ மை கடவுளே’ பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் டிராகன். இந்த படத்தில் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் வெளியான முதல் நாளே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் டான் பட கதையோடு ஒத்திருந்தாலும் திரைக்கதையில் சுவாரஸ்யம் காட்டி அசத்தியிருந்தார் அஸ்வத் மாரிமுத்து. 2k கிட்ஸ்கள் பற்றிய கதை என்றாலும் எல்லோருக்கும் பிடிப்பது போல படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக மிஷ்கின் மற்றும் ஜார் மரியானின் கதாபாத்திரங்கள் மிகவும் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்திற்கு பாசிட்டிவ் ரிவ்யு வந்ததால் தியேட்டர்களில் கூட்டம் அதிகரித்து கொண்டே போகிறது. கோமாளி படத்தில் இயக்கம், லவ் டுடே படத்தில் இயக்கி நடித்தது, டிராகன் படத்தில் நடிப்பு மட்டுமே என தொடர்ந்து 3 ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

எனவே, கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறியிருக்கிறார். பல இயக்குனர்களின் பார்வையும் பிரதீப் ரங்கநாதன் மீது விழுந்திருக்கிறது. கல்லூரி வாழ்க்கையில் பொறுப்பில்லாமல், ஒழுங்காக படிக்காமல் நிறைய அரியர்களை வைத்திருக்கும் ஹீரோ கல்லூரி படிப்புக்கு பின் வாழ்க்கையை எப்படி அணுகிறார் என்பதுதான் படத்தின் கதை.


அதோடு, ஓ மை கடவுளே படத்தில் வருவது போலவே இரண்டாம் வாய்ப்பு என்கிற கான்செப்ட்டை இந்த படத்திலும் கொண்டு வந்திருக்கிறார் அஸ்வத். இந்த படம் 28 கோடி என சிலர் சொன்னார்கள், சிலரோ 32 கோடி என்றார்கள். இந்நிலையில், படம் வெளியாகி இதுவரை 50.22 கோடி வசூல் செய்திருப்பதாக பிரதிப் ரங்கநாதனே தனது சமூகவலைத்தள பக்கங்களில் தெரிவித்திருக்கிறார்.

இதில், தமிழகத்தில் 24.9 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா 6.25 கோடி, கேரளா, கர்நாடகா, வட மாநிலம் சேர்த்து 4.37 கோடி, வெளிநாட்டில் 14.7 கோடி என இப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எப்படியும் இந்த வார இறுதிவரை இந்த படத்திற்கு வசூல் இருக்கும் என்பதால் எப்படியும் இப்படம் 100 கோடி வசூலை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News