கட்டுப்பாட்டை இழந்து சுக்குநூறாக நொறுங்கிய கார்.. அஜித்துக்கு என்ன ஆச்சு?...

By :  Ramya
Update: 2025-01-07 13:53 GMT

ajith car race

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். சினிமா மீது எந்த அளவுக்கு காதல் இருக்கின்றதோ அதே அளவுக்கு பைக் மற்றும் கார் ரேஸ் மீது அலாதி பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். இது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான். படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கேப் கிடைத்தால் பைக்கை எடுத்துக் கொண்டு நீண்ட தூரம் ட்ரிப் சென்றுவிடுவார்.

சினிமாவில் நடிக்க தொடங்கிய போது கார் ரேஸில் பங்கேற்று விபத்து ஏற்பட்ட காரணத்தால் சில ஆண்டுகள் கார் ரேஸ் பக்கம் செல்லாமல் இருந்து வந்த நடிகர் அஜித் தற்போது மீண்டும் கார் ரேஸ் போட்டியில் பங்கேற்பதற்கு கிளம்பிவிட்டார். சினிமாவில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி உள்ள இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ஒருசேர முடித்து விட்டார்.

சமீபத்தில் தான் இந்த இரண்டு திரைப்படங்களின் பேட்ச் ஒர்க் மற்றும் டப்பிங் பணிகள் இரண்டுமே முடிவடைந்தது. பின்னர் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற அஜித் அங்கு தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சென்னை திரும்பி இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று அவரது குடும்பத்தினர் சென்னை விமான நிலையம் வந்து கார் ரேஸில் பங்கேற்பதற்காக துபாய் கிளம்பி இருக்கும் நடிகர் அஜித்தை வழி அனுப்பி வைத்தார்கள்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வந்தது. துபாயில் வரும் 11 மற்றும் 12 தேதிகளில் கார் ரேஸ் நடைபெற இருக்கின்றது. அதில் நடிகர் அஜித் கலந்து கொள்ள இருக்கின்றார். இதற்காக பயிற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றார். இன்று நடிகர் அஜித் கார் ரேஸ் நடைபெறும் இடத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவற்றில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.


அப்போது காரின் முன் பக்கம் சுக்குநூறாக உடைந்து விட்டது. பின்னர் அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவரை அங்கிருந்து பத்திரமாக மீட்டார்கள். இதில் அதிர்ஷ்டவசமாக நடிகர் அஜித்துக்கு எந்த ஒரு விபத்தும் காயமும் ஏற்படவில்லை. அவர் காரில் இருந்து நன்றாக இறங்கி செல்லும் வீடியோவானது வைரலாகி வருகின்றது.

முதலில் கார் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி வைரலாகி வந்த நிலையில் அஜித் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள். நடிகர் அஜித்துக்கு என்ன ஆனது என்று பதறிப்போன நிலையில் அடுத்ததாக அவர் நலமுடன் இருக்கும் வீடியோ வெளியானது. இதை பார்த்த அஜித் ரசிகர்கள் எதற்கு இந்த ரிஸ்க். கார் ரேஸ் எல்லாம் வேண்டாம் நீங்கள் படங்களில் நடித்து ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே போதும் என்று சமூக வலைதள பக்கங்களில் கூறி வருகிறார்கள்.


Full View
Tags:    

Similar News