பல வருடங்களுக்குப் பிறகு அஜித் கொடுத்த பேட்டி.. மனுஷன் ஹாலிவுட் ஆக்டர் மாதிரி இருக்காரே..
நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமா மீது இருக்கும் ஆர்வம் போல கார் ரேஸ் இங்கிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித். தற்போது துபாயில் நடைபெற்று வரும் கார் ரேசிங் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார். இதற்காக தான் கமிட் செய்து வைத்திருந்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் ஒருசேர முடித்து இருக்கின்றார்.
இரண்டு திரைப்படங்களும் தற்போது வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றது. சமீப நாட்களாக நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் தான் இணையதள பக்கங்களில் உலா வருகின்றன. உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கின்றார் நடிகர் அஜித். அதற்கு காரணம் கார்ரேசிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
ஜனவரி 11ம் தேதி நாளை தொடங்கி துபாயில் நடக்கும் துபாய் 24H கார் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கின்றார் நடிகர் அஜித். இதற்காக அஜித்குமார் ரேசிங் டீம் துபாயில் முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பந்தய உடையில் அவரை பார்க்கும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் பயிற்சி எடுத்து வந்தபோது அவரின் காரானது ஆக்ஸிடெண்ட் ஆனதை பார்த்து ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர். ஆனால் நடிகர் அஜித்துக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை. பொதுவாக நடிகர் அஜித் மீடியாக்களை தவிர்த்து வரக்கூடிய ஒரு நபர். சமீப நாட்களாக அவரின் எந்த ஒரு திரைப்படத்திற்கும் ஆடியோ லான்ச் நடைபெற்றதே கிடையாது.
மேலும் பொதுவெளிகளில் எந்த ஒரு பேட்டியும் கொடுத்தது கிடையாது. சினிமா வாழ்க்கை அதை விட்டால் தனது தனிப்பட்ட வாழ்க்கை என்று இருக்கக்கூடியவர் அஜித். தற்போது முதல் முறையாக பேட்டி கொடுத்திருக்கின்றார். இந்த பேடியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது '18 வயதில் ரேசிங் தொடங்கினேன்.
அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்ததால் பங்கேற்கவில்லை. பிறகு 2010 ஆம் ஆண்டு யுரோப்பியா டு பங்கேற்றேன். பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்க முடியவில்லை. தற்போது ரேசிங் தொடருக்கு ஒரு உரிமையாளராக வந்திருக்கின்றேன். அடுத்து கார் ரேஸ் முடியும் வரை நான் எந்த படங்களிலும் நடிக்கப் போவது கிடையாது. ரேஸ் முடிந்த பிறகு தான் எனது படங்களில் கவனம் செலுத்த இருக்கின்றேன்.
கடந்த காலத்தில் சினிமா காரணமாக என்னால் கார் ரேசிங்கில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஆனால் இந்த முறை எனது முழு கவனமும் கார் ரேஸ் மீதுதான் என்று கூறி இருக்கின்றார். இது அவரது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. அடுத்த ஒன்பது மாதம் என்றால் கிட்டதட்ட இந்த வருடமே முடிந்து விடுமே என்று ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.