நீ என்ன பெரிய அப்பாடக்கரா?.. நீயே போலி அறிவாளி!.. மிஸ்கினை வெளுத்து வாங்கிய நடிகர்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். தற்போது சினிமாவில் படங்களை இயக்கி வந்தாலும் ஒருபுறம் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். இவர் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றார். அதாவது இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் பாட்டில் ராதா என்கின்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் தான் ஒரு பெரிய குடிகாரன் என்கின்ற அளவிற்கு பல கெட்ட வார்த்தைகளால் மேடை நாகரிகம் இல்லாமல் பேசி இருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியிருந்ததாவது ' நானே மிகப்பெரிய குடிகாரன். ஆனால் என்னை மது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது கிடையாது. சினிமாவிலேயே அதிகம் குடித்தவனும், குடிக்க போகிறவனும் நான்தான்.
இந்த மேடையில் இருக்கின்ற வெற்றிமாறன், அமீரை தவிர மற்ற எல்லோருமே குடிப்பவர்கள் தான். உதவி இயக்குனராக இருந்தபோதிலிருந்தே குடிக்க சென்று விடுவேன். அதிலும் கையில் கொசுவத்தியுடன் செல்வேன். குடிக்க ஆரம்பித்தால் சினிமாவை பெற பற்றி பேச தொடங்கி விடுவோம். இளையராஜாவை பாடுவோம். நான் பாட ஆரம்பித்தால் எங்கிருந்தாவது ஒரு பாட்டில் தனக்கு வந்துவிடும்.
என்னை குடிகாரனாக மாற்றியது இளையராஜா தான். இந்த போதைகளை விடவும் இளையராஜா மிகப்பெரிய போதை' என்று வார்த்தைக்கு வார்த்தை கெட்ட வார்த்தைகளால் பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கின்றார். இவர் பேசிய வீடியோவானது சமூக வலைதள பக்கங்களில் வைரலானதை தொடர்ந்து பலரும் மிஸ்கின் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேடை நாகரிகம் இல்லாமல் இப்படி ஆபாச வார்த்தைகளால் பேசுவதை யாரும் ஏன் கண்டிக்கவில்லை. மேடையில் பெரிய பெரிய இயக்குனர்கள் இருந்த போதும் ஒருமுறை கூட அவரை தடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி வந்தார்கள். அந்த வகையில் தற்போது நடிகர் அருள்தாஸ் மிஸ்கின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கின்றார்.
சென்னையில் இன்று 2கே லவ் ஸ்டோரி என்ற பட விழா நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய அருள்தாஸ் மிஸ்கின் பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில் அவர் பேசியிருந்ததாவது 'மிஸ்கின் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய வீடியோவை பார்த்தேன். பார்ப்பதற்கே அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அநாகரிகமாக எப்படி உங்களால் இப்படி பேச முடிகின்றது.
இயக்குனர் என்றால் என்னவெல்லாம் பேசலாமா? தமிழ் சினிமா இந்திய சினிமாவில் பெரிய மதிக்கக் கூடிய இடத்தில் இருக்கின்றது. ஒரு மேடையில் பல பிரபலங்கள் இருக்கிறார்கள். பல பத்திரிக்கையாளர்கள், பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு இடத்தில் மேடை நாகரிகம் இல்லாமல் பேசுவது எப்படி? நீங்கள் தனியாக வீட்டில் அமர்ந்து பேசுங்கள், உங்களை யார் கேட்கப் போகிறார்கள்.
பொது இடத்தில் எப்படி பேச வேண்டும் என்கின்ற அறிவு வேண்டாமா? பல புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று கூறுகிறீர்கள், உலக படங்களை பார்த்திருக்கிறேன் என்று கூறுகிறீர்கள். அப்படி இருந்தும் என்ன அறிவு இருக்கின்றது உங்களுக்கு? என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா? நீ ஒரு போலி அறிவாளி, எல்லாரையும் சகடுமேனிக்கு வாடா என்கிறார், போடா என்கின்றார்.
பாலாவை எல்லாம் அவன் இவன் என்று பேசுகின்றார். இளையராஜாவை அவன் என்கின்றார். அன்று மேடையில் அமர்ந்திருந்த அனைத்து இயக்குனர்களும் மிகப்பெரிய ஜாம்பவான்கள். இயக்குனர் வெற்றிமாறன், அமீர், பா ரஞ்சித் ஆகியோரெல்லாம் மண் சார்ந்த படங்களை மிகச் சிறப்பாக எடுப்பவர்கள். அவர்கள் முன்பு இப்படி அநாகரீகமாக பேசுவது மிகவும் தவறானது' என்று தனது ஆதங்கத்தை கொட்டியிருந்தார்