2 வருஷமா பிளான் போட்டும் சிம்புவுக்கு நடக்கல!. சைலண்டா சாதிச்சி காட்டிய தனுஷ்!...
Danush Simbu: ரஜினிக்கு கமல் போட்டி நடிகராக இருந்து போல, விஜய்க்கு அஜித் போட்டி நடிகராக இருந்தது போல சிம்புவுக்கு போட்டி நடிகராக வந்தவர்தான் தனுஷ். இதில் சிம்பு சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டார். இவரின் அப்பா டி.ஆர் சிம்புவை சிறுவனாக இருக்கும்போதே பல படங்களிலும் நடிக்க வைத்தார். அதன்பின் அப்பாவின் இயக்கத்தில் உருவான காதல் அழிவதில்லை படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார்.
அதன்பின் பல படங்களிலும் சிம்பு நடித்தாலும் அவர் சரியாக ஷூட்டிங் வருவது இல்லை. இயக்குனர் காலை 7 மணிக்கு அவரை வர சொன்னால் 11 மணிக்குதான் போவார். இதனாலேயே இவரை வைத்து படமெடுக்க பல இயக்குனர்களும் யோசித்தனர். சிம்புவுக்கு நடிப்பு மட்டுமில்லை. கதை, திரைக்கதை, இசை, இயக்கம், எடிட்டிங், தயாரிப்பு என எல்லாவற்றிலும் நல்ல அனுபவமும் அறிவும் உண்டு.
அதனால்தான் மன்மதன் என்கிற படத்தின் கதையை அவரே எழுதி நடித்தார். அந்த படத்தை அவரே கிட்டத்தட்ட இயக்கியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், தனுஷோ துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுமாகி காதல் கொண்டேன், திருடா திருடி என தொடர் ஹிட் படங்களை கொடுத்து முன்னேறினார்.
இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் சிம்புவுக்கு இருப்பது போல தனுஷ் மீது எந்த புகாரும் இல்லை. எனவே, படிப்படியாக வளர்ந்து தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் கூட நடித்தார். ஆனால், சிம்புவோ தமிழை தாண்டி இன்னும் போகவே இல்லை. ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களுக்காக தனுஷ் தேசிய விருது வாங்கினார். சிம்பு இதுவரை ஒரு விருது கூட வாங்கவில்லை.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஒரு சரித்திர கதையை உருவாக்கினார். அது ரஜினிக்கு போய் அவர் நடிக்கமால் சிம்புவுக்கு போனது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க முன் வந்தது. 150 கோடி பட்ஜெட் என பேசப்பட்டது. ஆனால், ஓடிடி நிறுவனங்கள் புது படங்களுக்கு கொடுத்த தொகையினை குறைத்துவிட்டதால் அது நடக்கவில்லை.
அதனால், சிம்பு அந்த படத்தை தானே தயாரித்து நடிப்பது என முடிவெடுத்தார். இடையில் தக் லைப் படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் கதையில் நடிக்கப்போய்விட்டார். இது முடிந்ததும் அவர் தேசிங்கு பெரியசாமி படத்தில் நடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், தயாரிப்பாளர் யாரும் சிக்கவில்லை. ஆனால், தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படம் சரித்திர கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்தை போர்த்தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இந்த படத்தில் மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
2 வருஷம் போராடியும் சிம்பு நடிக்க ஆசைப்பட்ட சரித்திர கதை டேக் ஆப் ஆகாத நிலையில் தனுஷுக்கு சரித்திர கதை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.