இதெல்லாம் அவங்க குரல் இல்லயா?!.. சின்மயி குரல் கொடுத்த முக்கிய திரைப்படங்கள்!...

By :  MURUGAN
Published On 2025-07-08 19:18 IST   |   Updated On 2025-07-08 19:18:00 IST

Chinmayi: கோலிவுட்டில் பிரபலமான பாடகியாக இருப்பவர் சின்மயி. அதோடு, பல நடிகைகளுக்கும் இவர் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. ஆனால், கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத்தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பல பெண்களும் மீ டூ என்கிற ஹேஷ்டேக்கில் பல பேர் மீதும் புகார் சொன்னார்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் அது நீர்த்துப்போய்விட்டது. ‘வைரமுத்து மீது பழி சொல்லும் சின்மயி எப்படி அவரின் திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தார்?. அந்த மேடையில் வைரமுத்து நிற்கும்போது சின்மயி முகத்தில் அப்படியொரு சந்தோஷம் காட்டினாரே.. வைரமுத்து அப்படி செய்திருந்தால் சின்மயி அப்படி சந்தோஷமாக அங்கே நின்றிருப்பரா?’ என பலரும் கேள்வி எழுப்பினார்கள்.


ஒருபக்கம் கோலிவுட்டின் டப்பிங் யூனியன் சின்மயி பின்னணி குரல் கொடுப்பதற்கு தடை விதித்தது. அதற்கு பின்னணியில் ராதாரவி காரணமாக இருந்தார். அதேபோல், இசையமைப்பாளர்களும் சின்மயிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்நிலையில், தக் லைப் இசை வெளியிட்டு விழாவில் சின்மயி பாடிய ‘முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ’ பாடல் வீடியோ செம வைரலானது. இதையடுத்து சின்மயி மீண்டும் சினிமாவில் பாட வேண்டும் என குரல்கள் எழுந்திருக்கிறது.

இந்நிலையில், சின்மயி பல நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருந்தாலும் அதில் முக்கியமான 5 படங்கள் பற்றி பார்ப்போம். பெரும்பாலும் மும்பையிலிருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வரும் நடிகைகளுக்கு சின்மயி அதிகம் குரல் கொடுத்திருக்கிறார். சில்லுன்னு காதல் பூமிகா, தாம்தூம் கங்கனா ரனாவத், வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி, விண்ணைத்தாண்டி வருவாயா திரிஷா, சுறா தமன்னா, கோ கார்த்திக் நாயர், ஒஸ்தி ரிச்சா, நான் ஈ சமந்தா, என்றென்றும் புன்னகை திரிஷா, 96 திரிஷா, சீதா ராமன் மிருனள் தாக்கூர் (தெலுங்கு), லியோ திரிஷா ஆகியோருக்கு குரல் கொடுத்தவர் சின்மயிதான்.


குறிப்பாக சமீரா ரெட்டி, சமந்தா, திரிஷா ஆகியோருக்கு அதிக படங்களில் குரல் கொடுத்திருக்கிறார். இதுபோக பல படங்களில் பல நடிகைகளுக்கும் சின்மயி குரல் கொடுத்திருக்கிறார். இதில், பல தெலுங்கு படங்களும் அடக்கம். அப்படிப்பட்ட சின்மயிக்குதான் டப்பிங் யுனியன் தடை விதித்தது. அந்த தடையை விலக்க வேண்டும் என இப்போது குரல்கள் எழுந்திருக்கிறது.

முத்த மழை ஹிட்டுக்கு பின் சின்மயிக்கு விஜய் ஆண்டனி போன்றவர்கள் வாய்ப்பு கொடுக்க முன்வந்துள்ளனர். மேலும், சின்மயி தனியாக இசைக்கச்சேரி நடத்துவும் துவங்கிவிட்டார். வருகிற ஆகஸ்டு 2ம் தேதி இவரின் இசைக்கச்சேரி சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் நடக்கவுள்ளது.

Tags:    

Similar News