என் சினிமா கெரியருக்கு ரூட்டு போட்டதே விஜய் படம்தான்!.. சுந்தர்.சி ஓப்பன் டாக்!...

By :  MURUGAN
Published On 2025-07-08 21:56 IST   |   Updated On 2025-07-08 21:56:00 IST

Actor vijay: இயக்குனர் மணிவண்ணனிடம் சினிமா கற்றவர் சுந்தர்.சி. முறை மாமன் என்கிற படம் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இவர். அதன்பின் இவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா படம் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றி சுந்தர்.சியை கவனிக்க வைத்தது.

ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் போன்ற படங்களை இயக்கினார். காதல் கலந்த காமெடி படங்கள்தான் சுந்தர்.சியின் பலம். சுந்தர்.சி. படம் என்றாலே காமெடி அசத்தலாக இருக்கும் என்கிற இமேஜை உருவாக்கினார். இவர் இயக்கத்தில் வடிவேலு நடித்த கிரி, வின்னர் போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். அப்படி அவர் ஹீரோவாக நடித்து வெளியான சில படங்கள் நல்ல வசூலை பெறவே தான் நடிக்கும் படங்களில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். ஒருபக்கம், காமெடி கலந்த பேய் படங்களையும் எடுக்க துவங்கினார். அப்படி அவர் இயக்கிய அரண்மனை படம் 4 பாகங்களாக வெளிவந்து வசூலை அள்ளியது.


 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,சந்தானம் நடித்து வெளிவந்த மதகஜராஜா படம் இந்த வருட துவக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்தது. இப்போது நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார். அதில், சுந்தர்.சியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்.சி. ‘நான் விஜய் நடித்த ரசிகன் படத்தை தியேட்டரில் பார்த்தேன். எனக்கு அப்படம் பிடிக்கவில்லை. ஆனால், படம் நன்றாக இருக்கிறது.. ஹிட் என சிலர் சொன்னர்கள். எனவே, மீண்டும் போய் படம் பார்த்தேன். ரசிகர்கள் கைத்தட்டி ரசித்து படம் பார்த்தார்கள். சரி ஒரு காட்சியில் அப்படி ரசிப்பார்கள் என நினைத்து அடுத்த காட்சி பார்த்தேன். அப்போதும் அதே இடத்தில் கைத்தட்டி ரசிகர்கள் ரசித்தார்கள்.

எனவே எனக்கு பிடித்த மாதிரி படம் எடுப்பதை விட ரசிகர்களுக்கு பிடித்தது போல படமெடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன். அதனால்தான் ஜாலியான படங்களை இயக்க துவங்கினேன். என்னை மாற்றியது ரசிகன் படம்தான்’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News