துப்பாக்கியைத்தான் கொடுத்தாரு.. அப்பாவுமா கேட்பீங்க? SK படத்தின் புது அப்டேட்
sivakarthikeyan
Sivakarthikeyan:சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை மிக்க நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் இணையப் போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.
இந்த இரு படங்களுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்கு முன் பேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் அந்த படத்தை சிபிச் சக்கரவர்த்தி இயக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் சிபிச் சக்கரவர்த்தி இப்போது நானியை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்க இருப்பதால் பேஷன் ஸ்டுடியோ சிபிச் சக்கரவர்த்திக்கு பதிலாக குட் நைட் பட இயக்குனரை கமிட் செய்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
படத்தின் கதைப்படி இது ஒரு அப்பா மகன் சென்டிமென்ட் கதையாக இருக்கும் என கூறுகிறார்கள். சமீப காலமாக அமரன் போன்ற ஒரு மாஸ் கதையுள்ள திரைப்படங்களில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் மறுபடியும் ஃபேமிலி சென்டிமென்ட் கதையில் நடிக்க போகிறார் என்று சொன்னதும் அனைவருமே இந்த படத்திற்காக எதிர்பார்த்து இருக்கின்றனர். ஏற்கனவே ரஜினிமுருகன், சீமராஜா போன்ற படங்கள் காமெடியுடன் இணைந்து ஃபேமிலி செண்டிமெண்ட் படமாகவும் இருந்தது.
mohanlal
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மோகன்லால் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே மோகன் லால் விஜய்க்கு அப்பாவாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார் .இப்போது சிவகார்த்திகேயனுக்கு அப்பா என்று சொன்னதும் விஜய் கொடுத்த துப்பாக்கி தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் துப்பாக்கியை கொடுத்ததுமே அடுத்த தளபதி அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் தான் என கூறி வருகிறார்கள். இதில் துப்பாக்கியையும் சேர்த்து ஜில்லா படத்தில் நடித்த அப்பா கேரக்டரையும் சிவகார்த்திகேயன் தூக்கி விட்டாரே என கூறி வருகிறார்கள்.