ஒரே கதையில் நடிக்கும் சூர்யா.. நயன்தாரா.. ஆர்.ஜே.பாலாஜிக்கு விபூதி அடிச்ச சுந்தர்.சி!...
Karuppu: திரையுலகில் சில சமயம் ஒரே கதையை இரண்டு இயக்குனர்கள் எடுப்பார்கள். இது அடிக்கடி நடக்கும். சம்பந்தப்பட்ட இயக்குனரிடம் பேசி கதை என்ன தெரிந்துகொண்டு தனது கதையில் மாற்றம் செய்ய கூட அவர்கள் முயற்சி செய்யமாட்டார்கள். கதையை மாற்றமாட்டேன் என அடம்பிடிப்பார்கள்.
ஆங்கில நாவலையோ அல்லது திரைப்படத்தையோ சுட்டு ஒரு இயக்குனர் படமெடுப்பார். அதையே இன்னொரு இயக்குனரும் செய்வார். 90களில் ஒரே கதையை இயக்குனர் வஸந்த் பூவெல்லாம் கேட்டுப்பார் எனவும், பிரவீன் காந்த் ஜோடி எனவும் எடுத்தனர். இரண்டிலுமே கதை ஒன்றுதான்.
இந்நிலையில்தான், ஆர்.ஜே.பாலாஜியும், சுந்தர்.சியும் ஒரே கதையை இயக்கி வருவது தெரியவந்திருக்கிறது. ரேடியோவில் ஆர்.ஜே-வாக வேலை செய்து கொண்டிருந்தவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தர்.சிதான். துவக்கத்தில் நடித்து வந்த ஆர்.ஜே.பாலஜி ஒருகட்டத்தில் அவரே கதை, எழுதி இயக்கவும் துவங்கினார். அப்படி அவர் உருவாக்கிய படம்தான் மூக்குத்தி அம்மன்.
இந்த படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருந்தார். வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படம் போலீ சாமியார்கள் பற்றி பேசியது. பாடம் ஹிட் ஆனதும் இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு ஆர்.ஜே.பாலாஜி ஒரு கதையை எழுதினார். ஆனால், அவருக்கும், வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு ஏற்பட அது நடக்கவில்லை.
எனவே, சுந்தர்.சியை அழைத்து மூக்குத்தி அம்மன் 2-வை நீங்கள் இயக்குங்கள் என ஐசரி கணேஷ் சொல்லிவிட்டார். இதிலும், அம்மனாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், போலீஸ் அதிகாரியாக இருக்கும் நயன்தாரா அம்மன் அவதாரமும் எடுப்பது போல கதை எழுதப்பட்டிருக்கிறது. ஒருபக்கம், இந்த கதையில் பெண் கதாபாத்திரத்தை ஆண் கதாபாத்திரமாக மாற்றி சூர்யாவை வைத்து ஆர்.ஜே.பாலாஜி கருப்பு என்கிற பெயரில் இயக்கி வருகிறார். இதில், வழக்கறிஞராக இருக்கும் சூர்யா கருப்ப சாமியாக வந்து கெட்டவர்களை அழிப்பது போல கதை எழுதப்பட்டிருக்கிறது.
படம் வெளிவரும்போது கண்டிப்பாக இது சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்படும் என்றே கணிக்கப்படுகிறது. ஆனாலும், சுந்தர்.சி தனது ஸ்டைலில் காமெடியெல்லாம் வைத்து படத்தை ஹிட் செய்துவிடுவார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். ஒருபக்கம், பல வருடங்களுக்கு பின் கருப்பு தனக்கு ஹிட் படமாக அமையும் என சூர்யாவும் நம்பியிருக்கிறார்.