எல்லாருமே கஷ்டப்பட்டு உழைக்கிறோம்!.. நல்லா இல்லைன்னு சொல்லாதீங்க.. புகழ் உருக்கம்!..
எல்லாரும் படத்தை போய் பாருங்க நல்லா இல்லனா சொல்லுங்க நாங்க கண்டிப்பா அதை மாத்திக்கிறோம் என உருக்கமாக பேசியுள்ளார் புகழ்.;
நடிகர் விமல் நடிப்பில் 2013ம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள தேசிங்கு ராஜா 2 படம் வருகின்ற ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நேற்று நடைப்பெற்ற தேசிங்கு ராஜா 2 படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நகைச்சுவை நடிகர் புகழ் உருக்கமாக பேசியுள்ள விடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் எழில் இயக்கியுள்ள தேசிங்குராஜா 2 படத்தில் விமல், புஜிதா பொன்னாடா, ஜனா, ரவி மரியா, ரோபோ சங்கர், சிங்கம்புலி, கிங்ஸ்லி, புகழ், ராஜேந்திரன், மதுமிதா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார். படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் கதாபாத்திரங்களின் நடிப்பும் பார்வையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆடியோ லான்ச்சில் பேசிய புகழ், குக் வித் கோமாளியில் இருக்கும் அந்த துடிப்பு படத்தில் இல்லையே என பலரும் கேட்பார்கள், இப்படத்தில் இயக்குனர் எழில் என்னை சுதந்திரமாக நடிக்க விட்டுட்டார், அவர் வெறும் ஆக்ஷன் கட்டுன்னு மட்டும்தான் சிரிச்சிக்கிட்டே சொல்லுவாரு. சசிகுமார் மற்றும் விமல் இருவரும் எந்த ஒரு போட்டி பொறாமையும் இன்றி என்னிடம் நல்லா பழகுறாங்க. படக்குழுவில் அனைவரும் எனக்கு கை கொடுத்து உதவினர்.
ஒரு படம் எடுக்கனும்னா அத்தனை பேரும் உழைக்கிறார்கள். ஆனால், ஒரே வார்த்தையில் படம் நல்லா இல்லன்னு ஈசியா சொல்லிட்டு போயிடுறீங்க. எல்லாரும் படத்தை போய் பாருங்க நல்லா இல்லனா சொல்லுங்க நாங்க கண்டிப்பா அதை மாத்திக்கிறோம் என உருக்கமாக பேசியுள்ளார். மேலும், படத்தில் புகழ் லேடி கெட்டப்பில் பெண் குரலில் பேசி நடித்து அசத்தியுள்ளாராம்.