சரத்குமாரை நடிக்க வச்சது நான் செஞ்ச தப்பு!.. ஃபீல் பண்ணி பேசும் கவுதம் மேனன்!....

By :  MURUGAN
Published On 2025-07-01 18:08 IST   |   Updated On 2025-07-01 18:08:00 IST

Gautham Menon: மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் மேமன். மின்னலே வெற்றி என்பதால் இரண்டாவது படமாக காக்க காக்க படத்தை இயக்கினார். முதல் படத்தை தயாரிப்பாளருக்கு எடுத்துக் கொடுத்த கவுதம் மேனன் காக்க காக்க படத்தை தனது ஸ்டைலில் இயக்கினார். ஏனெனில், அந்த படத்தில் அவரும் ஒரு தயாரிப்பாளராக இருந்தார்.

நந்தா படத்தை பார்த்துவிட்டு சூர்யாவை இந்த படத்தில் நடிக்க வைத்தார். காக்க காக்க படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இருவருக்கும் இடையே இருந்த கெமிஸ்ட்ரியே படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அதோடு, போலீசாரின் வாழ்வில் நடக்கும் துயர சம்பவங்கள் பற்றி இப்படம் பேசியது. இந்த படத்தின் மூலம் ஸ்டைலீஸ் இயக்குனராக மாறினார் கவுதம் மேனன்.

கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தை கொடுத்தார். இந்த படத்தின் பாடல்களும், படமும் ஹிட் அடித்தது. அதன்பின் தொடர்ந்து பல படங்களையும் கவுதம் மேனன் இயக்கினார். ஆனால், பெரிய ஹிட் படத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. சிம்புவை வைத்து இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படம் மட்டுமே ஹிட் அடித்தது.


அதன்பின் அவர் இயக்கிய படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. சிம்புவை வைத்து அவர் இயக்கிய அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு போன்ற பாடங்களும் வெற்றியை பெறவில்லை. அதோடு, சொந்த படம் எடுத்து பல கோடிகள் நஷ்டமடைந்தார் கவுதம் மேனன். அதனால்தான் விக்ரமை வைத்து அவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் இதுவரை வெளியாகவில்லை.

கடனை அடைப்பதற்காக சினிமாவில் நடிக்க துவங்கினார். இதுவரை பல படங்களிலும் நடித்துவிட்டார். சரத்குமார் - ஜோதிகாவை வைத்து இவர் இயக்கிய படம் பச்சைக்கிளி முத்துச்சரம். 2007ம் வருடம் வெளிவந்த இந்த படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இப்படம் பற்றி பேசியிருக்கிறார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சேரனை நடிக்க வைப்பதே என் விருப்பமாக இருந்தது. அவர்கிட்ட கதை சொன்னபோது ‘3 மாதங்கள் காத்திருக்க முடியுமா?’ எனக்கேட்டார். இந்த படத்தை முடித்துவிட்டு ஜோதிகா திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தார். எனவே, சரத்குமாரை வைத்து அந்த படத்தை இயக்கினேன். அது என் தப்பான சாய்ஸ். நான் அதிக டைம் எடுக்கிறேன்.. அதிக செலவு பண்றேன் என சொல்கிறார்கள். அந்த படத்தை மிகவும் குறைவான நாட்களில் எடுத்தேன். அந்த படம் ஓடவில்லை’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News