தோனி பார்த்து மிரண்டு போன விஜய் படங்கள்!.. அதிலும் அவர் ரசித்த அந்த விஷயம்!....
Actor vijay Dhoni: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் சினிமாவுக்கு வந்தவர் விஜய். துவக்கத்தில் இவரின் படங்கள் ஓடவில்லை என்றாலும் பூவே உனக்காக படம் இவருக்கு கை கொடுத்தது. அதன்பின் துள்ளாத மனமும் துள்ளும், கில்லி, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இவரை முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாற்றியது. தொடர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் மாறினார். அவரின் படங்கள் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஜனநாயகன் ஷூட்டிங் முடிந்த நிலையில் விஜய் தீவிர அரசியலில் இறங்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்க்கு நடிகர்கள், நடிகைகள் பலருமே ரசிகர்களாக இருக்கிறார்கள். அதிலும், இப்போது நடித்து வரும் இளம் நடிகர், நடிகைகளுக்கு பிடித்த நடிகராக விஜயே இருக்கிறார். அதில் எல்லோரும் மிகவும் ரசிப்பது விஜயின் நடன திறமைதான். அதுதான் அவருக்கு நிறைய ரசிகர், ரசிகைகளை உருவாக்கியது.
தன் ரசிகர்களுக்காகத்தான் விஜய் தனது படங்களில் நடனத்திற்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கிறார். சின்ன வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவராக விஜய் இருந்திருக்கிறார். பல மணி நேரங்கள் நடனமாடி பயிற்சி எடுத்திருக்கிறார். அதுதான் பின்னாளில் அவருக்கு சினிமாவில் உதவியது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ரசித்த 2 விஜய் படங்கள் பற்றி பார்ப்போம். 2008ம் வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிமுகமான விழாவுக்காக தோனி சென்னை வந்திருந்தபோதுதான் விஜய் அவருக்கு பழக்கம் ஆகியுள்ளார். துவக்கத்தில் ஹாய், ஹலோ என்பது மட்டுமே இவர்களின் பழக்கமாக இருந்திருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்தபோது டிவியில் விஜய் நடனாமடுவதை பார்த்து அசந்து போன தோனி ‘செமயா டேன்ஸ் ஆடுறரே என ஆச்சர்யமாகி அவர் நடித்த சில படங்களின் டிவிடிக்களை கேட்டிருக்கிறார். கில்லி, திருப்பாச்சி படங்களை பார்த்து திரில்லாகி திருப்பாச்சி அருவாள் பற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு தோனி சினிமா தயாரிப்பு நிறுவனம் துவங்கிய போது விஜயை நேரில் சந்தித்து பேசியிருந்தார். எனவே, தோனியின் தயாரிப்பில் விஜய் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.