OTT WATCH: 90ஸ் கிட்ஸ் பேவரிட் ஹீரோ நடிப்பில் MISTRY.. வெப் சீரிஸ் எப்படி இருக்கு?
OTT WATCH: 90ஸ் கிட்ஸ்களின் பிரபல ஹீரோ நடித்திருக்கும் மிஸ்டரி வெப் சீரிஸ் HOTSTAR ஓடிடி வெளியாகி இருக்கும் நிலையில் இதன் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ்களை பேசும் திரைவிமர்சனம் இங்கே.
90ஸ் கிட்ஸ்களுக்கு நேரடி தமிழ் சீரியலை விட ஹிந்தியில் இருந்து டப் செய்யப்படும் சீரியல்கள் தான் அதிக பிரபலம். அந்த வகையில் உள்ளம் கொள்ளை போகுதடா சீரியல் இன்றளவும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சூப்பர் ஹிட் அடித்தது.
இதில் ராம் கேரக்டரில் நடித்த ராம்கபூரை யாராலும் மறந்துவிட முடியாது. அவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் Mistry வெப் சீரிஸ் ஹாட் ஸ்டார் இல் வெளியிடப்பட்டிருக்கிறது. காவல்துறையை சேர்ந்த அதிகாரியான ராம்கபூர் தன் முன்னாலேயே மனைவியின் கார் வெடித்து அவர் இறந்து போன காரணத்தால் பாதிக்கப்படுகிறார். இதனால் இவருக்கு அதிக ஓசிடி பிரச்சனைகள் உருவாகிறது.
அதே நேரத்தில் மற்றவர்களை விட ஒரு விஷயத்தை கவனிக்கும் போது அதில் துல்லியமாக பார்த்து குற்றத்தை கண்டுபிடிக்கும் தெளிவான mistry. தனியாக டிடெக்டிவ் ஏஜென்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த வெப் சீரிஸ் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு குற்ற சம்பவம் காட்டப்பட்டு அதற்கு ராம்கபூர் எப்படி விடை கண்டுபிடிக்கிறார் என்பதை பெரிய பரபரப்பு இல்லாமல் சாதாரணமாக சொல்லி அசத்தியிருக்கிறார் இயக்குனர்.
ராம்கபூர் பெரிய அளவில் அதிரடி ஹீரோவாக ரசிகர்கள் மனதில் பதியவில்லை. அப்பாவி முகத்தோற்றத்தில் அவரின் சாதாரணமான டயலாக் பேசும் ராமை தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்த வெப் சீரிஸிலும் அதே போன்ற குணாதிசியத்துடன் இயக்குனர் அவரை காட்டி இருப்பதை இந்த வெப் சீரிஸின் மிகப்பெரிய பலமாக மாறி இருக்கிறது.
பிரபல அமெரிக்க வெப் சீரியஸ் ஆன மாங்க் தொடரின் ரீமேக் என்றாலும் இந்திய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ராம்கபூருக்கு உதவியாக வரும் சிகா டல்சானியா நம்மை ரசிக்க வைக்கிறார்.
ஹிட் எபிசோடுகளைக் கொண்ட இத்தொடரில் ஒவ்வொரு எபிசோடு இருக்கும் ஒரு குற்றம் காட்டப்படுகிறது. ஆனால் எந்த குற்றத்தையும் போலீசார் கண்டுபிடிக்காமல் இருப்பது தான் அபத்தமாக இருக்கிறது. அவர்களிடமிருந்து சரியான க்ளுவை கூட சொல்லாமல் மொத்தமாக காவல்துறையே Mistryஐ நம்பியிருப்பது போல் காட்டப்படுகிறது.
க்ரைம் வெப்தொடர் என்றாலும் பெரிய அளவில் சஸ்பென்ஸ்கள் எதுவும் இல்லாமல் அசால்ட்டாக விஷயத்தை சொல்லி கடந்து விடுகின்றனர். அதிலும் முழுவதும் தன்னுடைய மனைவி கொலைக்கு காரணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார் ராம்கபூர்.
ஆனால் கடைசிவரை அதற்கான விடை கொடுக்கப்படவில்லை. ஒரு விளையாட்டு சீசன் 2 வருவதற்கும் வாய்ப்புண்டு. ஒவ்வொரு இடத்திலும் Mistry யின் அந்த ஓசியில் பிரச்சினையை காட்டுவதற்காக ராம்கபூர் அதிக மெனக்கெட்டாலும் சில இடங்களில் அதை அப்பட்டமாக மறந்து விடுகிறார்.
பரபரப்பாக திரில்லிங்காக இருக்கும் என்றால் சத்தியமாக இல்லை. ஆனால் ஒரு நல்ல டைம் பாஸ் ஆக இந்த வெப் சீரிஸ் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. அடுத்த சீசன் ஆவது இதில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி பரபரப்பாக்கினால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும்.