நீங்க இல்லாம நான் இல்ல!.. எல்லாரும் எதிர்பார்த்த அறிவிப்பு.. எஸ்டிஆர் 50 படத்தின் அப்டேட்..!

By :  Ramya
Update: 2025-02-03 07:30 GMT

Actor Simbu: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து வருகிறார் நடிகர் சிம்பு. ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மாநாடு என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கி இருக்கின்றார்.

அதற்கு முன்பு வரை பல்வேறு சர்ச்சைகள், பிரச்சினைகளில் சிக்கி வந்த சிம்பு அது எதுவும் இல்லாமல் தற்போது தான் உண்டு தன் வேலையுண்டு என்று படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார். இன்று நடிகர் சிம்பு தன்னுடைய 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். 


செகண்ட் இன்னிங்ஸ்: நடிகர் சிம்பு உடல் எடையை கடகடவென குறைத்து மாநாடு என்கின்ற திரைப்படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை கொடுத்தது.

எஸ்டிஆர் 48: இந்த படங்களை தொடர்ந்து நடிகர் சிம்பு கமிட்டான திரைப்படம் தான் எஸ்டிஆர் ௪௮. இந்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த நிலையில் பின்னர் படம் தொடர்பான எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. சிறிது நாட்கள் கழித்து கமல்ஹாசன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவில்லை என்கின்ற அறிவிப்பு வெளியானது. இத்துடன் இந்த படம் டிராப் ஆகிவிட்டது என்றெல்லாம் பேச தொடங்கினார்கள்.

கமல்ஹாசனின் தக் லைப்:  நடிகர் சிம்பு மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வரும் நிலையில் வரும் ஜூன் 5ம் தேதி படம் வெளியாக இருக்கின்றது. இதில் ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்திருக்கின்றார். இன்று சிம்பு பிறந்த நாளை முன்னிட்டு தக் லைப் படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

எஸ்டிஆர் 50: நடிகர் சிம்பு தற்போது பார்க்கிங் திரைப்பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கின்றது. இதற்கு எஸ்டிஆர் 48 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். அதுதான் எஸ்டிஆர் 49 என்று கூறப்படுகின்றது.


காலை முதலே இந்த அறிவிப்புகள் வெளியாகி வந்த நிலையில் தேசிங்கு பெரியசாமியை சிம்பு கழட்டி விட்டுவிட்டார் என்று சோசியல் மீடியாக்களில் கூறி வந்தார்கள். இந்நிலையில் தற்போது மாஸாக ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதாவது நடிகர் சிம்பு தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கின்றார். அட்மேன் சினி ஆர்ட்ஸ் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் சிம்பு இதன் மூலமாக தேசிங்கு பெரியசாமியின் திரைப்படத்தை தயாரிக்கப் போவதாக அறிவித்திருக்கின்றார்.

இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. இது ஒரு வரலாற்று படமாக இருக்கும் என்றும், இதில் நடிகர் சிம்பு இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க போவதாகவும் கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த செய்தி சிம்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது.

Tags:    

Similar News