காபி ரைட்ஸ் எனக்கு தேவையில்லை... அதுதான் முக்கியம்... தேனிசைத் தென்றல்னா சும்மாவா?

By :  Sankaran
Update: 2025-02-04 04:06 GMT

தமிழ்த்திரை உலகில் 'தேனிசைத் தென்றல்'னு அழைக்கப்படுபவர் தேவா. இவரது பாடல்கள் எல்லாமே சூப்பர்தான். கானாவைக் கொண்டு வந்தவர். ரஜினிக்கு டைட்டில் கார்டு மியூசிக் போட்டவர்னு பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் தனது திரையுலகப் பயணங்கள் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.

சங்கீதத்தை விட இங்கிதம் தான் முக்கியம். சங்கீதம் கத்துக்கலாம். ஆனா இங்கிதத்தைக் கத்துக்க முடியாது. கொஞ்சம் மியூசிக் இதா ஆன உடனே அது வந்துடும். அது ஸ்ரீகாந்துக்கிட்ட இல்ல. ரொம்ப சந்தோஷம்.

35 வருஷம்: இப்ப டிஜிட்டல் வந்துருக்கு. ஆனா அப்போ வெறும் ரேடியோ. டிவி.தான் அதுவும் தூர்தர்ஷன் மட்டும்தான். அப்பவே தூதுவளை இலை அரைச்சி, பஞ்சுமிட்டாய் சேலை கட்டி, எருக்கஞ்செடி ஓரம், கருகரு கருப்பாயி அப்பவே ஹிட். ஆனா 35 வருஷம் அப்புறம் கடந்து 2கே கிட்ஸ்சுக்கும் அதுக்கு டான்ஸ் ஆடுறது சந்தோஷமா இருக்கு.

நான் வந்து களிமண். டைரக்டருக்கு என்ன பொம்மை வேணுமோ அதை செஞ்சிக்கலாம். அதுக்கு நான் தயார். உங்களுக்கு என்ன வேணும்? நான் வந்து என் சாங்கா எதையும் நினைக்கிறது இல்ல.


நான்தான் ரசிகன்: யாரு ஹீரோவா நடிக்கிறாரோ அவருக்கு, அந்தக் கேரக்டருக்குத்தான் நான் பாட்டு பண்றேன். என் தேவாவுக்காக எல்லாம் பண்ணல. இது வந்து சூப்பர்ஸ்டாரா? அவருக்குப் பாட்டு. அவங்க ரசிகர்கள் என்னென்ன விரும்புவாங்களோ? அவங்களுக்குத் தான் கொடுக்கணும். இல்லன்னா ரொம்ப ஈசியா சொல்லிட்டுப் போயிடுவாங்க.

சூப்பர்ஸ்டாருக்கு மியூசிக் போட்டா முதல்ல ரசிகர்கள் ரசிக்கட்டும். அப்புறம் அவரு ரசிப்பாருன்னு தான் போடுவேன். கமல், அஜீத், விஜய், பிரபு, சரத்குமார்னு எல்லா ஹீரோக்களுக்கும் அப்படித்தான் பாட்டுப் போடுவேன். முதல்ல நான்தான் ரசிகன்.

காபி ரைட்ஸ்: நான்தான் ஹீரோ. 23 வயசுல போராட ஆரம்பிச்சி 40 வயசுல மியூசிக் சான்ஸ் கிடைச்சது. அப்படி லேட்டா வந்தாலும் பயன்படுத்திக்கணும். காபி ரைட்ஸ் எனக்குத் தேவையில்லை. அதுல பணம்தான வரும். இன்னைக்கும் என்னோட பாடல்களைக் குழந்தைகள் ரசிக்கிறாங்க இல்லையா. அதுதான் முக்கியம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

Tags:    

Similar News