ரெட்ரோ பட வாய்ப்பு இந்தப் படத்தால தான் கிடைச்சுதாம்.. பூஜா ஹெக்டே சொன்னத கேளுங்க..!

By :  Ramya
Update: 2025-02-04 10:35 GMT

Actress Pooja Hegde: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிஸியான நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முதல் முறையாக முகமூடி என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். முதல் திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை தரவில்லை. பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் சென்ற பூஜா ஹெக்டே தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார்.

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து அவரின் கடைசி திரைப்படம் ஆன ஜனநாயகம் என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் தோல்விக்கு பிறகு கமிட்டான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகின்றார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகின்றார். 2D நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகின்றது. மேலும் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.

ரெட்ரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் வருகிற மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் மீது சூர்யா ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறது. காரணம் கங்குவா திரைப்படத்தின் தோல்விதான். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் மீது சூர்யா மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் அடுத்த திரைப்படம் வெற்றி படமாக இருக்க வேண்டும் என்கின்ற முயற்சியில் இருக்கின்றார் சூர்யா.

ரெட்ரோ திரைப்படம்: ரெட்ரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் இப்படம் நிச்சயம் வெற்றி படமாக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் மலைபோல் நம்பி வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் தான் நடிப்பதற்கு எப்படி கமிட்டானேன் என்பது குறித்து நடிகை பூஜா ஹெக்டே மனம் திறந்து பேசியிருக்கின்றார்.

பூஜா ஹெக்டே பேட்டி: தமிழ் சினிமாவில் ரெட்ரோ திரைப்படத்தின் மூலமாக சூர்யாவுடன் முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷியாம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தேன்.



அந்த திரைப்படத்தில் தனது நடிப்பை பார்த்துவிட்டு இம்ப்ரஸ் ஆகி தான் கார்த்திக் சுப்புராஜ் ரெட்ரோ திரைப்படத்தில் தன்னை நடிப்பதற்கு அழைத்தார். அந்த திரைப்படத்தின் ரிசல்ட் சரியாக இல்லை என்றாலும் அதில் எனது நடிப்பு மூலமாக இன்னொரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி. மேலும் அப்படத்தில் இடம்பெற்று இருந்த இரண்டு எமோஷனல் காட்சிகளை பார்த்துவிட்டு தான் ரெட்ரோ படத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும்' என்று கார்த்திக் சுப்புராஜ் முடிவு எடுத்ததாக அந்த பேட்டியில் பேசியிருந்தார்.

Tags:    

Similar News