குட் பேட் அக்லி படத்தில் இந்த பாடலா?.. ஆதிக் செஞ்சிருக்கும் தரமான ஃபேன் பாய் சம்பவம்!..

By :  Ramya
Update: 2025-02-04 09:11 GMT

Actor Ajith: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்து இருக்கின்றார். துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படம் வருகிற 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

விடாமுயற்சி திரைப்படம்: நடிகர் அஜித் துணிவு திரைப்படத்திற்கு பிறகு கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருக்கின்றார். மேலும் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கின்றார்.


படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவில்லை.

இதனை தொடர்ந்து தற்போது பிப்ரவரி 6ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள். இன்னும் படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு நாட்களில் இருப்பதால் பல இடங்களில் பிரீ புக்கிங் தொடங்கி நல்ல வசூல் வேட்டை செய்து வருகின்றது.

குட் பேட் அக்லி திரைப்படம்: விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் கம்மிட்டான திரைப்படம் தான் குட் பேட் அக்லி திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். மேலும் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கின்றது.

படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி இருக்கின்றது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெகுவிரைவிலேயே எடுத்து முடித்து விட்டார். இந்த திரைப்படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு சர்ப்ரைஸ் ஆன விஷயத்தை செய்திருப்பதாக கூறப்படுகின்றது.


அதாவது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பஞ்சுமிட்டாய் என்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார். அதற்கு திரையரங்குகளில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதேபோல் ஒரு செயலை இந்த திரைப்படத்திலும் செய்திருக்கின்றார். அதாவது அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வத்திக்குச்சி பத்திக்காது' என்ற பாடலை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

அந்தப் பாடலை இப்படத்தில் ரீமிக்ஸ் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. அஜித் ரசிகர்களுக்கு இது நிச்சயம் செம ட்ரீட்டாக இருக்கும் எனவும், ரசிகர்கள் திரையரங்குகளில் இந்த பாடலை கொண்டாடி தீர்த்து விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று கூறப்படுகின்றது. 

Tags:    

Similar News