இளம் இயக்குனருடன் மோதல்?!.. வேறு இயக்குனரை டிக் அடித்த சிவகார்த்திகேயன்!..
Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து சினிமாவில் நடிகராக மாறியவர் சிவகார்த்திகேயன், துவக்கத்தில் காமெடி கலந்த காதல் கதைகளில் நடித்து வந்த அவர் இப்போது சீரியஸான கதைகளில் நடிக்க துவங்கிவிட்டார். அமரன் திரைப்படம் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்திருக்கிறது.
அமரன் வசூல்: சினிமாவில் மிகவும் குறுகிய காலத்தில் மேலே போனவர் சிவகார்த்திகேயன். அவரின் வளர்ச்சி பலருக்கும் பொறாமையை கொடுத்தது. அவரின் அமரன் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துவிட்டது. எனவே, தனது சம்பளத்தை 70 கோடியாக சிவகார்த்திகேயன் மாற்றிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அமரன் படத்திற்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். ஆனால், ஹிந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கும் படத்தை உடனே துவங்க வேண்டியிருந்ததால் எஸ்.கே.படத்தை விட்டு அந்த படத்தை இயக்கப்போனார் ஏ.ஆர்.முருகதாஸ்.
பராசக்தி திரைப்படம்: அந்த இடைவெளியில் அமரன் படத்தை முடித்துவிட்டு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். 1965ம் வருடம் ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் செய்த மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் வாழ்க்கையை ஒட்டிய கதை என சொல்லப்படுகிறது.
சிபி சக்ரவர்த்தி: இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு பின் டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது நடக்குமா என்பது தெரியவில்லை.
ஏனெனில், சிபிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அந்த படத்திலிருந்து சிபி விலகிவிட்டதாகவும், இயக்குனர் அஹமத்தை சிவகார்த்திகேயன் டிக் அடித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒருபக்கம், சிவகார்த்திகேயனுக்காக வெங்கட்பிரபுவும் காத்திருந்தார். ஆனால், இன்னும் 2 வருடங்களுக்கு என்னிடம் கால்ஷீ இல்லை என கை விரித்துவிட்டார் எஸ்.கே.