AIல பாட்டைப் போடுறதுல என்ன பெருமை? சொந்தமா பண்ணுங்க... வெகுண்டு எழுந்த இளையராஜா

By :  Sankaran
Update: 2025-02-02 08:27 GMT

இசை சாம்ராஜ்யம் என்றாலே அது இளையராஜாவைத் தான் சொல்வார்கள். 80ஸ் குட்டீஸ்களுக்கு மட்டும் அல்ல. இப்ப வரைக்கும் இவரது பாடல்களுக்கு அவ்ளோ மவுசு. எங்கு போனாலும் இளையராஜாவின் இசை என்றால் மக்கள் ரசித்துக் கேட்கின்றனர். ஒரு சுற்றுலா போனால் காரில், பஸ்ல இளையராஜாவின் பாடல்களைத் தான் போட்டுக் கேட்குறாங்க. இரவு வேலை என்றால் கடைகளில் பாடுவது எல்லாம் இளையராஜாவின் பாடல்கள் தான்.

பாக்கியசாலிகள்: சடங்கு, திருமண வீடு போன்ற சுப காரியங்களுக்கும் இளையராஜாவின் பாடல்கள்தான் ஒலிபரப்பாகிறது. இப்படி இசையை நம் வாழ்க்கையோடு இரண்டற கலக்கச் செய்தவர் தான் அந்த இசைஞானி. அப்படிப்பட்டவர் நம் தமிழ்த்திரை உலகிற்குக் கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம். அந்த வகையில் அவர் வாழும் காலகட்டத்தில் நாமும் வாழ்ந்து வருவதால் நாம் அனைவரும் பாக்கியசாலிகள்.


இசை என்னும் இன்ப வெள்ளம்: இப்போது இளையராஜா தமிழகம் எங்கும் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக கச்சேரிகள் நடத்தி வருகிறார். அவர் எந்த ஊரில் நடத்தினாலும் ரசிகர்களின் பேராதரவு அவருக்கு இருக்கத்தான் செய்கிறது. அங்கு இசை என்னும் இன்ப வெள்ளத்தில் ரசிகர்களைத் திளைக்கச் செய்து விடுகிறார். இதுதான் அவரது இசைக்கும் மற்றவர்களின் இசைக்கும் உள்ள வேறுபாடு.

புல்லாங்குழல் கூட கதாநாயகன்: ராகதேவன் என்று அவரை ரசிகர்கள் அழைக்கிறார்கள். அவரது இசையில் புல்லாங்குழல் கூட கதாநாயகன்தான். அப்படி அதற்கென்றே தனியாகப் பல பாடல்களை இசைத்திருப்பார். இவரது படங்கள் பெரும்பாலும் இசை மற்றும் பாடல்களுக்காகவே சூப்பர்ஹிட் ஆவதுண்டு.

AI தொழில்நுட்பம்: அந்த வகையில் இப்போது செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் வந்துவிட்டது என்கிறார்கள். மறைந்த கலைஞர்களின் வாய்ஸை அதில் கொண்டு வருகிறார்கள். பழைய பாடல்களையும் ரீமிக்ஸ் செய்கிறார்கள். அதெல்லாம் ரசிக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இதுகுறித்து இசைஞானி இளையராஜா என்ன சொல்கிறார்னு பாருங்க.

AI கூட போட்டி: நான் இன்னிக்கும் AI கூட போட்டி போட்டுக்கிட்டு இருக்கேன். நான் போட்ட இசை எல்லாம் நான் போட்டது. ஆனா இன்னிக்கு ஏஐ வச்சி எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அது கற்பனை சுடரை கெடுக்குது. நீங்க சொந்தமா பண்ணுங்க. இன்னொருத்தன் போட்ட பாட்டை நான் இப்படி மாத்தி இருக்கேன்னு சொல்றதுல என்ன பெருமை என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜா.  

Tags:    

Similar News