யாரு சொன்னா ட்ராப்புன்னு?.. கெத்தா களமிறங்கும் வாடிவாசல்.. எப்போ சூட்டிங் தெரியுமா?..
நடிகர் சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு பிறகு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நடிகர் சூர்யா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். ஆனால் சமீப நாட்களாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் எதுவும் அந்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. நடிகர் சூர்யா கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
கங்குவா சொதப்பல்:
கடந்த நவம்பர் 14ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கங்குவா. கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் மெனக்கெட்டு நடித்திருந்தார். மேலும் சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருந்தார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இதனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சூர்யாவின் கெரியரிலேயே பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. ஆனால் இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றார் நடிகர் சூர்யா. இருப்பினும் அடுத்தது திரைப்படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.
சூர்யாவின் லைன் அப்:
கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது என்று கூறப்படுகின்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கும் கமிட்டாகி இருக்கின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூரில் நடைபெற்று வருகின்றது. இதில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா நடித்து வருகின்றார். இருவரும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்து நடித்து வருகிறார்கள். இதனால் இந்த திரைப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. நடிகர் சூர்யாவின் இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகின்றது.
வாடிவாசல்:
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த திரைப்படம் வாடிவாசல். இந்த திரைப்படம் தொடர்பான தகவல் வெளியானதற்கு பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. சூர்யாவும் மற்ற இயக்குனர்களுடன் இணைந்து படத்தில் நடித்து வந்தார். அதேபோல் இயக்குனர் வெற்றிமாறனும் விடுதலை ஒன்று மற்றும் விடுதலை இரண்டு என்று அடுத்தடுத்த பாகங்களை இயக்குவதில் பிஸியாகிவிட்டார். இதனால் ரசிகர்கள் பலரும் இந்த படம் ட்ராப் ஆகிவிட்டது. அவ்வளவுதான் இனி வராது என்று கூறி வந்தார்கள்.
ஆனால் இந்த திரைப்படம் டிராப்பாகவில்லை விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது பொங்கல் பண்டிகைக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், நடிகர் சூர்யா இதில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.