விஷால் திருமணம் செய்து கொள்ளும் நடிகை அவரா?!... ஜோடி பொருத்தம் சூப்பர்!...

By :  MURUGAN
Update: 2025-05-19 06:48 GMT

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவரின் அப்பா 90களில் தயாரிப்பாளராக இருந்தவர். சரத்குமாரை வைத்து ஐ லவ் இந்தியா போன்ற அதிக பட்ஜெட் படங்களை தயாரித்திருக்கிறார். அவரின் மகன் விஷாலுக்கு இயக்குனராகும் ஆசையே இருந்தது. எனவே, நடிகர் மற்றும் இயக்குனர் அர்ஜூனிடம் உதவியாளராக வேலை செய்தார்.

ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது. இவர் நடிப்பில் வெளியான திமிரு, சண்டக்கோழி போன்ற படங்களின் வெற்றி விஷாலை மார்க்கெட் உள்ள ஒரு ஹீரோவாக மாற்றியது. எனவே, பல இயக்குனர்களின் படங்களிலும் நடித்தார். அதேநேரம், வெற்றியை விட அதிக தோல்விப்படங்களை கொடுத்தவர் இவர்.


அதுவும் கடந்த பல வருடங்களாகவே விஷாலின் நடிப்பில் வெளியாகும் எந்த படமும் ஓடுவதில்லை. மார்க் ஆண்டனி படம் மட்டுமே ஓடியது. இப்போது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். மதகஜராஜா பட விழாவுக்கு வந்த போதும், சமீபத்தில் விழுப்புரத்தில் திருநங்கைகள் விழா ஒன்றிலும் கலந்துகொண்ட போதும் அவரின் உடல்நிலை அதிர்ச்சியை கொடுத்தது.

ஒருபக்கம் விஷால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. சரத்குமாரின் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால், அது பிரேக்கப்பில் முடிந்தது. மலையாள நடிகை நித்யா மேனனை அவர் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண்ணோடு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், அதுவும் திருமணத்தில் முடியவில்லை.


சமீபத்தில் ஊடகத்தில் பேசிய விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை ஆகஸ்டு 15ம் தேதி திறக்க திட்டமிட்டிருக்கிறோம். ஆகஸ்டு 29ம் தேதி என் பிறந்தநாளில் என் திருமணம் பற்றி சொல்லுவேன். இது காதல் திருமணம்தான்’ என சொல்லியிருந்தார். எனவே, அந்த பெண் யாராக இருப்பார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில், விஷால் திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் நடிகை சாய் தன்ஷிகா என சொல்லப்படுகிறது. பேராண்மை உள்ளிட்ட பல படங்களிலும் சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார். கபாலி படத்தில் ரஜினியின் பெண்ணாக நடித்திருப்பார். இவருக்கும், விஷாலுக்கும் இடையேதான் காதல் ஓடிக்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News