விஜய் சேதுபதி- பூரி ஜெகனாத் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
ரி ஜெகனாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் விஜய் சேதுபதி. கிட்டத்தட்ட 50 படங்களை தாண்டியுள்ள இவர் ஹீரோ மட்டுமின்றி வில்லன் வேடங்களிலும் நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே தோல்வி படங்களை கொடுத்து வந்த விஜய் சேதுபதிக்கு மகாராஜா மிகபெரிய வெற்றியை கொடுத்தது. ஆனாலும் அடுத்து வந்த ஏஸ் அவ்ரது மார்கெட்டை அதள் அபாதாளத்திற்கு தள்ளியது.
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நித்யாமேனனுன் இவர் நடித்துள்ள தலைவன் தலைவி படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தினை அவர் மிகவும் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான பூரி ஜெகனாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வெளியாயின. இந்த சூழ்நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரபூர்வமாக துவங்கியது. சம்யுக்தா நாயகியாக நடிக்கிறார்.