இட்லி கடைக்கு ஆப்படிக்கும் காந்தாரா!.. இவ்வளவு மாசம் கழிச்சி வந்தா இப்படியா?!..
Idli kadai: ஒரு திரைப்படத்தை எடுப்பது மட்டுமில்லை. அதை சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும். அப்படி ரிலீஸ் செய்யும் போது அப்படத்தின் வசூலை பாதிக்கும்படி மற்ற ஹீரோக்களின் படங்கள் வராமல் இருக்க வேண்டும். இது எல்லாம் சரியாக அமைந்தால்தான் ஒரு திரைப்படம் வெற்றிபெறும். தப்பான நேரத்தில் ரிலீஸ் செய்த பல படங்கள் தோல்வி அடைந்திருக்கிறது.
சூர்யாவின் கங்குவா படத்திற்கு முதலில் ஒரு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் வருகிறது என தெரியவந்ததும் ரிலீஸை தள்ளி வைத்தார்கள். அப்படி வெளியான கங்குவா படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. அதற்கு இப்படத்திற்கு எதிராக வந்த நெகட்டிவ் விமர்சனங்களும் முக்கிய காரணமாக அமைந்தது.
தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம்தான் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன், ராஜ்கிரன், பார்த்திபன், அருண்விஜய் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படம் கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்தபோது இப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது. இதனால் பட வேலைகள் முடங்கியது.
எனவே, தனுஷ் குபேரா படத்தில் நடிக்கப்போனார். இப்போது அந்த படம் வெளியாகி, ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துமுடித்துவிட்டார். இப்போது இட்லி கடை படத்தின் மற்ற வேலைகளை செய்து வருகிறார் தனுஷ். இந்த படத்தை வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியிட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் கந்தாரா படத்தின் அடுத்த பாகம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் முதல் பாதி ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இந்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே, இட்லி கடைக்கு போட்டியாக இப்படம் வெளியானால் இட்லி கடையின் வசூல் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. பல பிரச்சனைகளுக்கு பின் இட்லி கடையை வெளியிட்டால் இப்படி ஒரு சிக்கல் வந்திருக்கிறது.