பீனிக்ஸ் படத்துல நடிச்ச காக்கா முட்டை நடிகர்!.. சினிமாவால நொந்து நூடுல்ஸ் ஆகிட்டாராம்!..

By :  SARANYA
Published On 2025-07-07 21:19 IST   |   Updated On 2025-07-07 21:19:00 IST

தனுஷ் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விக்னேஷ் தனது திரைப்பட வாழ்க்கையில் சினிமாவை நம்பி வந்ததால் ஏற்பட்ட சவால்கள் குறித்து வேதனையுடன் பேசியுள்ளார்.

விக்னேஷ் சென்னையின் மீனவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இயக்குனர் மணிகண்டன் அவரை காசிமேடு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த விக்னேஷ் மற்றும் அவரது தம்பி ரமேஷையும் காக்கா முட்டை படத்தில் நடிக்க வைத்துள்ளார். இவர்களது இயல்பான நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து சமுத்திரகனியுடன் அப்பா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்னர் பல ஆண்டுகள் கழித்து தற்போது பீனிக்ஸ் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் பேட்டி அளித்திருந்த விக்னேஷ் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் முக்கியமான கதாப்பாத்திரம் நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தாலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சிறு வயதிலேயே அப்பா தவறியதால் 12ம் வகுப்புக்கு மேல் படிக்கவும் முடியவில்லை. குடும்பத்தை பார்க்கும் பொறுப்பும் என் மேல் விழுந்தது. வேறு எதாவது வேலைக்கு போகலாம்னு நினைத்தால் நீங்க அந்த படத்தில் நடிச்சவர் தான் ஏன் இந்த வேலைக்கு வரிங்க என்று பலரும் கேட்கின்றனர். என்னால அப்படியும் போக முடியாம இப்படியும் போக முடியாக ரொம்ப டிப்ரஷனுக்கு போயிட்டேன்.

நாங்க ஒரு போட் வச்சிருக்கோம் அதுல கடலுக்கு போய் மீன் பிடிச்சிட்டு வந்தால் ஒரு நாளைக்கு 1500 ரூபாய் வரை கிடைக்கும் அதை வச்சு தான் குடும்பத்தை ரன் பன்றேன். வடசென்னை படத்தில் ஐஸ்வர்யாவின் தம்பி கேரக்டரில் நான் நடித்திருக்கலாம்னு தோணுச்சு, மூனு ஹீரோயின் நடிக்கும் படத்திற்கு என்னை நடிக்க கூப்டிருக்காங்கா, ஆனால் நான் இன்னும் ரசிகர்கள் மத்தியில் குழந்தைதான் அதனால் அதை தவிர்த்ததாக வேதனையுடன் பேசியுள்ளார்.

Tags:    

Similar News