2 குழந்தைக்கு அம்மாவான பிறகும் இப்படியொரு ஷேப்பா!.. சூர்யா பட ஹீரோயினை பார்த்து சொக்கும் ஃபேன்ஸ்!..

By :  SARANYA
Published On 2025-07-07 21:30 IST   |   Updated On 2025-07-07 21:30:00 IST

நடிகை பிரணிதா திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியிருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தனது குடும்பத்துடன் விடுமுறை நாட்களை ஒரு தீவில் மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஷேர் செய்து வருகிறார்.


பொறுக்கி என்ற கன்னட திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை பிரணிதா தமிழில் உதயன் என்ற படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதை தொடர்ந்து சகுனி, மாஸ் என்ற மாசிலாமணி போன்ற படங்களில் கார்த்தி மற்றும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், தெலுங்கில் பவன் கல்யாணின் அட்டாரண்டகி தாரேதி படத்தில் நடித்த அவர் இந்தியில் புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா படத்திலும் நடித்தார்.


பின்னர் பிரணிதா நிதின் ராஜு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்ணா என்ற பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று விலகியிருக்கும் பிரணிதா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்களை ஷேர் செய்து வருகிறார்.


இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராமில் பிகினியில் தன் மகள் ஆர்னாவுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் தனது மகளுக்கு மிகவும் பிடித்த நீரால் சூழப்பட்ட தீவில் விடுமுறை நேரத்தை செலவழித்ததை மிகவும் ரசித்ததாக பதிவிட்டுள்ளார். 2 குழந்தைக்கு அம்மாவான பிறகும் பிரணிதாவின் கவர்ச்சி கொஞ்சமும் குறையவில்லையே என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News