த்ரில்லர் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.... டிமாண்டி காலனி 3க்கு பூஜை போட்டாச்சு
கடந்த சில வருடங்களில் வந்த த்ரில்லர் படங்களில் 2015 ல் வெளிவந்த டிமாண்டி காலனிக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு. அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த அந்த படத்தில் அருள்நிதி,ரமேஷ் திலக் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.
ஏசு.சின்னா இசையமைத்திருந்த இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆரம்பம் முதல் இறுதி வரை சீட்டின் நுனியில் ரசிகர்களை உட்கார வைத்த படம் இது.
முதல் பாகம் வெற்றியை அடுத்து டிமாண்டி காலனி 2ம் பாகம் வெளியானது. முதல் பாகம் அளவிற்கு இல்லையென்றாலும் படம் வெற்றி பெற்றது.இதில் ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தின் இறுதிக் காட்சியில் 3ம் பாகத்திற்கான லீடினை வைத்திருந்தார் இயக்குனர்.
இந்த நிலையில் டிமாண்டி காலனி 3ம் பாகம் வெளியாவது உறுதி ஆகியுள்ளது. இப்படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வெளி நாடுகளில் ப்டமாக்கபட உள்ளதாக கூறப்படுகிறது.