சிங்கப்பெண்ணே: தொலைந்த தாலியைத் தேடும் துளசியின் அம்மா! அன்பு ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டுவானா?
சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாகப் போய்க்கொண்டு இருக்கிறது. இன்றைய தொடரில் என்ன நடந்தது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆனந்தியிடம் உனக்கும் என்னை மாதிரி அந்தக் கர்ப்பிணி அபலைப் பெண் மீது இரக்கம் இருந்தது. உன் மனசும் துடிச்சது. அது எனக்குத் தெரியும். நான் உன்னைக் கைவிட மாட்டேன். அப்படி இப்படின்னு அன்பு ஆனந்தியிடம் உணர்ச்சிமயமாய் பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் அழாதே ஆனந்தின்னு கட்டி அணைக்கிறான்.
அதே நேரம் ஆனந்தியும் உணர்ச்சி வசப்பட்டு அன்புவைக் கட்டி அணைக்கிறாள். அதே நேரம் நமக்கும் ஒரு அழகான குழந்தை பிறக்கும்னு அன்பு சொல்லவும் ஆனந்திக்கு அப்போதுதான் சுயநினைவு வந்தவளாய் என்னை மன்னிச்சிடுங்க அன்புன்னு விலகியபடி நம்மை ரெண்டு பேரையும் விதி சேர விடாதுன்னு சொல்லி நழுவுகிறாள் ஆனந்தி.
அதைத் தொடர்ந்து துளசி வீட்டுல அவங்க அம்மா தாலியைக் காணோம்னு தேடி துளசியைக் கேட்குறாங்க. அதுக்கு எனக்குத் தெரியாதுன்னு சொல்கிறாள். அதே நேரம் அன்புவின் அம்மா லலிதாவும் வர அவளுக்கும் விஷயம் தெரிந்து என்ன விவரம்னு கேட்க துளசியின் அம்மா எல்லாவற்றையும் சொல்கிறாள்.
சரி விடுங்க. புது தாலி வாங்கிக்கலாம். எல்லாம் நல்லதுக்குத்தான்னு சொல்கிறாள். அதே நேரம் இது அபசகுணம்னு சொல்கிறாள் துளசியின் அம்மா. அதுக்குன்னு ஒண்ணும் கவலைப்படாதே. நேரம் வரும்போது உண்மை தெரிய வரும்னு சொல்கிறான். அப்போது துளசி நம்மை அத்தைக் கண்டுபிடிச்சிட்டாங்களோன்னு யோசிக்கிறாள்.
இதற்கிடையில் அன்பு தாலியை வைத்துக்கொண்டு நீயும் என்னை மாதிரி சேருற இடத்துக்காகத் தவிச்சிக்கிட்டு இருக்கேன்னு சொல்கிறான். அதே நேரம் ஆனந்தியின் கழுத்தில் கட்டுவதற்காகத் தாலியுடன் டயலாக் பேசியபடி கனவில் மிதக்கிறான் அன்பு.
இது ஒரு புறமிருக்க கோகிலாவின் கல்யாண நாள் ஊர்வலம், மேளம், பொண்ணு, மாப்பிளை வருகை என தடபுடலான ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனந்தி இருவருக்கும் தட்டில் சுற்றிப்போட்டு ஆரத்தி எடுக்கிறாள். அப்போது மாப்பிள்ளை தோழனாக அன்பு வருகிறான். ஆனந்தி கோகிலாவுடன் சிரித்தபடி வருகிறாள்.
எல்லாரும் கோகிலாவுக்குத் தான் கல்யாணம்னு நினைச்சிக்கிட்டு இருப்பாங்க. ஆனா இன்னைக்குத் தான் ஆனந்திக்கும், எனக்கும் கல்யாணம்கறது யாருக்கும் தெரியாது என்று அன்பு தன் மனதுக்குள் பேசிக்கொள்கிறான். இனி நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.