பில்டப்லாம் தேவையில்ல!.. ரஜினியும் விஜயும் ஒன்னுதான்!.. கூலி ஓடிடி ரேட் இதுதான்!...
Rajini vijay: விஜய் எப்போது ரஜினியை விட அதிக சம்பளம் வாங்க துவங்கினாரோ, எப்போது அவரின் படங்கள் ரஜினி படங்களை விட அதிக வசூலை பெற துவங்கியதோ அப்போது முதலே ரஜினி, விஜயில் யார் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்கிற விவாதம் எழுந்துவிட்டது. ஆனால், ரஜினி 50 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். ரஜினி படங்களை பார்த்து வளர்ந்தவர்தான் விஜய்.
இப்போதும் ரஜினியை விஜய் ‘தலைவர்’ என்றே அழைக்கிறார். லியோ பட வேலைகள் நடந்தபோது ‘நீ தலைவரை வைத்து ஒரு படம் இயக்கு’ என லோகேஷிடம் சொன்னதே விஜய்தான். அதேபோல், பீஸ்ட் படம் உருவான போது நெல்சனிடமும் விஜய் இதைத்தான் சொன்னார். ஆனால், இது புரியாமல் ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டு வருகிறார்கள்.
ரஜினிக்கு பாபா, குசேலன், தர்பார், அண்ணாத்த, வேட்டையன் போன்ற சில படங்கள் சறுக்கி இருக்கலாம். ஆனால், எந்திரன், 2.0, பேட்ட ஆகிய ஹிட் படங்களை கொடுத்தார். குறிப்பாக அவரின் ஜெயிலர் படம் 650 கோடி வசூலை அள்ளியது. இதுவரை எந்த விஜயின் படமும் இவ்வளவு வசூலை செய்தது இல்லை.
இப்போதுவரை ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் இடத்தில் இருக்கிறார் விஜய். அவர் 250 கோடி கேட்டாலும் கொடுக்க சிலர் தயாராக இருக்கிறார்கள். ரஜினியும் விஜயை தாண்ட வேண்டும் என சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவரின் கூலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருபக்கம் கூலி படத்தின் ஓவர்சீஸ் உரிமை விஜய் படங்களை விட அதிக விலைக்கு போயிருக்கிறது. அதற்கு காரணம் ரஜினி மட்டுமில்லை. லோகேஷ் கனகராஜும் ஒரு காரணம். இதுவரை ரிலீஸுக்கு முன்பே கூலி படம் 500 கோடி வியாபாரத்தை தொட்டிருக்கிறது. இதைப்பார்த்த ரஜினி ஜெயிலர் படத்திற்கு 250 கோடி சம்பளம் கேட்டதாகவும் ஒரு செய்தி வெளியே கசிந்தது.
இந்நிலையில், விஜயின் ஜனநாயகன் மற்றும் ரஜினியின் கூலி இரண்டு படங்களின் ஓடிடி உரிமைகளும் 125 கோடிக்குதான் விலை போயிருக்கிறது. அவ்வளவு ஏன்?. காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமும் 125 கோடிக்கே விலை போயிருக்கிறது. இதிலிருந்து ரஜினி, விஜய் என இருவருக்குமே மார்க்கெட்டில் ஒரே விலைதான் என்பது தெரிய வருகிறது.