கமல் நடிப்பில் 250 நாள் முதல் 1000 நாள்கள் வரை ஓடிய படங்கள்... லிஸ்ட் இதோ!
தமிழ்த்திரை உலகில் கமலைப் பொருத்தவரை ஒரு ஆல்ரவுண்டர். அதே போல பன்முகத்திறன் கொண்ட அவருக்குப் பலமொழிகளிலும் படங்கள் வெற்றிவாகை சூடியுள்ளன. எந்தெந்த மொழிகளில் என்னென்ன படங்கள்னு பார்க்கலாமா...
கமலுக்கு இலங்கையில் 1000 நாள் ஓடிய படம் 1980ல் வெளியான குரு. தமிழகத்தைப் பொருத்தவரை இந்தப் படம் சில்வர் ஜூப்ளி. அதே போல இந்தியில் வெளியான ஏக் துஜே கேலியே மிகப்பெரிய வெற்றிப்படம். இதுவும் ஒரு தியேட்டரில் 1000 நாள் ஓடியுள்ளது. மரோசரித்ரா என்ற தெலுங்கு படம் 500 நாளைக் கடந்து ஓடியது.
சாகர சங்கமம் தெலுங்குல 1 வருடம் ஓடியது. பெங்களூரு பல்லவி தியேட்டரில் 500 (511 நாள்கள்) நாளைக் கடந்து ஓடியுள்ளது. இதுதான் தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் வெளியாகி வெற்றிவிழா கண்டது. மலையாளத்தில் புஷ்பக விமானா என்ற படம் தமிழில் பேசும்படமாக வெளியானது. பெங்களூருவில் உள்ள ஸ்வப்னா தியேட்டரில் புஷ்பக விமானா படம் 510 நாளைக் கடந்து ஓடியது.
அடுத்து ஸ்வாதி முத்யம் என்ற தெலுங்கு படம் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் வெளியானது. பெங்களூரு பல்லவி தியேட்டரில் ஸ்வாதி முத்யம் 450 நாள்கள் ஓடியது. இந்துருடு சந்துருடு 365 நாள்கள் ஓடியது. பாலுமகேந்திரா கன்னடத்தில் கோகிலா என்ற படத்தை எடுத்தார். தமிழில் மீண்டும் கோகிலா என்ற பெயரில் வெளியானது. பெங்களூருவில் கோகிலா 450 நாள்கள் ஓடியது.
பொன்விழா என்றால் 50 வாரம் ஓடிய படங்கள். சாகர் என்ற இந்திப்படம் 1 வருடம் ஓடியது. கிராப்தர் என்ற படம் பொன்விழா கண்டது. அமிதாப், கமல், ரஜினி நடித்தது.
மூன்றாம்பிறை 1 வருடம் ஓடியது. தினசரி 4 ஷோக்களாக ஓடியது. 16 வயதினிலே, அபூர்வ சகோதரர்கள், தூங்காதே தம்பி தூங்காதே, வாழ்வே மாயம் படங்கள் 250 நாளைத் தாண்டி ஓடியது.