ராணுவ வீரர்களுக்கு சொத்தை எழுதிக் கொடுத்த ரஜினி பட வில்லன் நடிகர்.... அடடே அவரா?
ராணுவ வீரர்களுக்குக் கொடுக்கிற அந்த மனசு இருக்கே அது தான் கடவுள்...
சொத்துக்காக இன்னைக்கு அண்ணன், தம்பிகள் கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டேங்கறாங்க. பெத்தவங்களையே சொத்துக்காக அந்த மாதிரி செயல்கள்ல எல்லாம் ஈடுபடுறாங்க. காலம் அந்த அளவு கலிகாலமாப் போச்சு.
சிலர் போகும்போது எதையாவது கொண்டுகிட்டா போகப்போறோம்னு தத்துவம் பேசறாங்க. அவங்களும் அதே சொத்துக்காக அடிச்சிக்கிட்டு மல்லுக்கு நிக்கிறாங்க. இப்படி பேசுறது ஒண்ணு. செய்யறது ஒண்ணா மாறிப்போச்சு. நியாயமா இருக்குறவங்களுக்குத் தான் சோதனை மேல் சோதனை வருது.
சொத்தை எடுத்துக் கொண்டு அபகரிக்க முயற்சிக்கும் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு நடிகர் இருக்கிறாரே என்று எண்ணிப் பார்த்தால் வியப்பாகத் தான் உள்ளது.
அவர் அப்படி என்னதான் செய்து விட்டார் என்றால் ராணுவ வீரர்களுக்கு தன் சொத்தில் ஒரு பாகத்தை எழுதிக் கொடுத்துள்ளார். அவர் யார்? எதற்காக இப்படி ஒரு செயலை செய்ய முன்வந்தார் என்பதை அவரே சொல்லக் கேட்போம்.
80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர் சுமன். சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தினார். தற்போது ஏ.எல்.விஜய் இயக்;கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் அறிமுக விழாவில் அவர் பேசியது இதுதான்.
இந்தப் படத்தைப் பொருத்தவரை எனக்கு நல்ல கேரக்டர். அதை சிறப்பாகச் செய்ய முழு சுதந்திரத்தைக் கொடுத்த இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கு நன்றி. நான் இதுவரை 9 மொழிகளில் 450 படங்களில் நடித்து இருக்கிறேன்.
தமிழ்சினிமாவில் நடிப்பது எப்பவுமே எனக்கு மகிழ்ச்சி தான். இந்தக் கதை எனக்கு மிகவும் புதுமையாகத் தெரிந்தது. நாட்டின் உண்மையான வாட்ச்மேன்கள் யார் என்றால் அது ராணுவ வீரர்கள் தான். நாம நிம்மதியா வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் செய்றாங்க. அவர்களுக்கு ஜாதி, மதம் பேதமே இல்லை. ஆனால் நாம் தான் ஜாதி, மதத்தின் பெயரால கலவரம் செய்றோம்.
ஐதராபாத் பக்கத்துல எனக்கு 175 ஏக்கர் நிலம் இருக்கு. அதை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களின் குடும்பத்துக்குக் கொடுக்கலாம்னு என் மனைவி சொன்னாங்க.
நானும் அதை வரவேற்றேன். நாம உயிரோடு இருக்க நாட்டின் எல்லையில் எவ்வித வசதியும் இல்லாம, கடும் சூழலில் தன் உயிரையும் பொருட்படுத்தாம பாதுகாப்புப்படை வீரர்கள் நாட்டைப் பாதுகாத்து வர்றாங்க.
இதை உணர்ந்ததும் நான் முழுமனதோடு எனது 175 ஏக்கர் நிலத்தை கார்கில் போரில் உயிரிழந்த பாதுகாப்புப்படை வீரர்களுக்கு அளிக்க முன்வந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.