கடைசி 5 நிமிஷம் அந்த பொண்ணு எப்படி கஷ்டப்பட்டிருப்பாள்...ரிதன்யா அம்மாவை நேரில் சந்தித்த அம்பிகா

Published On 2025-07-08 14:15 IST   |   Updated On 2025-07-08 14:15:00 IST

சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய சம்பவங்களில் ஒன்று ரிதன்யா தற்கொலை விவகாரம். திருப்பூரை மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யா(27). அதேபகுதியைactress ambika meet Rithanya mother சேர்ந்த ஈஸ்வர மூர்த்தியின் மகன் கவினை கடந்த ஏப்ரம் மாதத்தில் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்த சில தினக்களிலேயே கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார். அதுமட்டுமின்றி கணவரால கொடுமையான பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.




 

இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி ரிதன்யா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ்-அப் மூலம் சில தகவல்களை பகிர்ந்திருந்தார். அதில் தனது தற்கொலைக்கு கணவர், மாமனார் மற்றும் மாமியாரே காரணம் என்று கூறியிருந்தார். அந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தற்போது கணவர் வீட்டார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.




 

ரிதன்யாவிற்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்தினை பகிர்ந்துவருகின்றனர். இந்த நிலையில் நடிமை அம்பிகா ரிதன்யா இல்லத்திகெ சென்று அவரது அம்மாவிற்கு ஆறுதல் கூறினார். அப்போது, ரிதன்யா கடைசி 5 நிமிஷம் அந்த பொண்ணு எப்படி கஷ்டப்பட்டிருப்பான்னு நினைச்சாலே பதறுது. இந்த வழக்குல ஏன் உடனே நடவடிக்கை எடுக்கல.. இதுக்கெல்லாம் கொடூரமான தண்டனை கொடுக்கணும் என்று தனது ஆதங்கத்தை கூறினார்.

Tags:    

Similar News