3 நாட்கள் தனியாக யாருடனும் பேசாமல்.. செல்போன் இல்லாமல்!.. சமந்தாவுக்கு என்னாச்சி!...

By :  Murugan
Update:2025-02-21 16:32 IST

Actress Samantha: மாஸ்கோவின் காவேரி என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சமந்தா. இவருக்கு எந்த சினிமா பின்னணியும் இல்லை. தமிழில் நடித்துகொண்டே தெலுங்கு படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வந்தார்.

தெலுங்கை விட இவர் தமிழில் நடித்தது குறைவான திரைப்படங்கள்தான். விஜயுடன் தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அதுபோக விக்ரம், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடனும் நடித்திருக்கிறார். தெலுங்கில் நடிக்கும்போது நாக சைதன்யாவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால், சில வருடங்களில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது. ஹிந்தி வெப் சீரியஸ் ஒன்றில் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடித்ததே அதற்கு காரணம் என சிலர் சொன்னார்கள். உண்மையான காரணத்தை இருவருமே சொல்லவில்லை. சமந்தா - நாகசைத்தன்யா விவாகரத்து ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டது.


ஆணாதிக்க சிந்தனை கொண்ட பலரும் சமந்தா மீது தவறு இருப்பதாக பேசினார்கள். அதில் சிலருக்கு சமந்தா சரியான பதிலடியும் கொடுத்தார். நாக சைதன்யாவை பிரிந்தபின் திரைப்படங்களில் நடிப்பது, நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது என பயணித்து வருகிறார். ஒருபக்கம் தோல் நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சமந்தா நடிப்பில் நேரடி தமிழ் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே அதிக படங்களில் நடிப்பதில் சமந்தா ஆர்வம் காட்டவில்லை. இதற்கிடையில் அவரின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சமந்தா ‘ நான் 3 நாட்கள் தொலைப்பேசியை பயன்படுத்தாமல் இருந்தேன். அந்த 3 நாட்கள் நான் யாருடனும் பேசாமல் மவுனமாக இருந்தேன். யாரையும் தொடர்புகொள்லவில்லை. என்னோடு நான் மட்டுமே இருந்தேன். நம்மோடு நாம் தனியாக இருப்பது கஷடமானது. பயங்கரமானது. ஆனால், இப்படி மவுனமாஅக இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது’ என சொல்லியிருக்கிறார்.

Tags:    

Similar News