ஏஜிஎஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்… டைரக்ட் செய்ய இருக்கும் அந்த டாப் இயக்குனர்…
Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் தற்போது சூப்பர் ஹிட் நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்த படத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி ஏற்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சின்னத்திரையில் இருந்து தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். முதலில் சுமார் ஸ்டாராக தான் இருந்தார். அதை தொடர்ந்து சமீபத்தில் அவர் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது.
முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் சாய் பல்லவி இந்து ரபேக்கா வர்க்கீஸாக நடித்து அசத்தி இருப்பார். இப்படம் 400 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை செய்தது. சிவகார்த்திகேயனின் முதல் திரைப்படமாக அமரன் 100 நாட்களை கடந்து வெற்றி நடைப்போட்டது.
சமீபத்தில் இதன் வெற்றி விழாவும் நடந்தது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது எனக்கு வரும் சம்பளத்தை எல்லாரும் பிடுங்க தான் பார்ப்பார்கள். ஆனால் முதல்முறையாக கமல் சார் தான் படம் ஷூட்டிங்கிற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே மொத்த சம்பளத்தையும் கொடுத்ததாக கூறினார்.
இது கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சிவகார்த்திகேயன் சொன்னதையும் அவர் மற்ற தயாரிப்பாளருக்கு செய்ததையும் சொல்லி விமர்சனங்கள் எழுந்தது. இருந்தும் அவர் கோலிவுட்டில் தொடர்ச்சியாக மாஸ் கூட்டணிகளுடன் இணைந்து வருகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி, சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அப்படத்தை பெரிய இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருக்கிறார்.