சச்சின் படத்தில் இந்த பாட்டு விஜய் வீட்டு பீரோவுக்குள் நடந்ததா? இயக்குனர் சொன்ன சுவாரஸ்யம்
Sachein: விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட் வெற்றியை பெற்ற சச்சின் திரைப்படம் விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கும் நிலையில் இப்படத்தின் சூப்பர் சுவாரஸ்யம் சம்பவம் ஒன்றை படத்தின் இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்து இருக்கிறார்.
கலைப்புலி எஸ் தாணு உருவான திரைப்படம் சச்சின். இப்படத்தில் நடிகர் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் எல்லாமே இன்றளவும் சூப்பர் ஹிட் ஆக அமைந்துள்ளது.
இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊட்டியில் நடத்தப்பட்டது. படத்திற்கான பாடலை நா முத்துக்குமார், கபிலன், பழனி பாரதி உள்ளிட்டோர் எழுதி இருந்தனர். இப்படம் 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் படக்குழு வெளியிட்டது.
ஆனால் அதே நாளில் வெளியான ரஜினிகாந்தின் சந்திரமுகி மற்றும் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் சச்சின் திரைப்படத்தின் வசூலை குறைத்தது. இதனால் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும்.
இந்நிலையில் தான் படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடக்கும் நிலையில் படத்தை மறு வெளியீடு செய்ய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு முடிவு செய்து அறிவித்திருக்கிறார். கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தின் ரீ-ரிலீஸ் பெரிய அளவில் வைரலானது.
புது படங்களின் வசூலை விட அதிக அளவில் கில்லி படத்தின் வசூல் இருந்தது. இதனால் சச்சின் திரைப்படமும் பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஜான் கொடுத்து இருக்கும் பேட்டியில், தேவி சரியான சேட்டை பிடிச்சவர். ஒரு நாள் விஜயுடன் சந்திக்கும் போது இங்கையே வாடி வாடி பாட்டை ரெக்கார்ட் செய்யலாமா எனக் கேட்டார்.
விஜய் இங்கையா எப்படி எனக் கேட்க பீரோ வைத்த பெட்ரூம் ஏதாவது இருக்கா என கேட்டார். விஜய் அந்த ரூமிற்கு அழைத்து செல்ல அதிலிருந்து துணிகளை எல்லாம் தேவியே எடுத்து பெட்டில் மேல் போட்டு விட்டார். எனக்கும் தப்பு செய்தது மாதிரி பயம் வந்தது.
உடனே இரண்டு பெட் சீட்டுகளை எடுத்து கதவில் போட்டு விஜயை நடுவில் நிறுத்தி அந்த பாட்டை மொத்தமுமாக ரெக்கார்டிங் செய்து முடித்து விட்டார். இன்றளவும் அங்கு நடந்த புகைப்படங்களும் என்னிடம் இருக்கிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.