விஜயின் அந்த படம் சுறா 2-வா?… பிரதீப்பின் டிவிட் திடீர் வைரல்.. வாய் கொழுப்பு பிடிச்சவருதான்!
Vijay: நடிகர் விஜய் நடிப்பில் சூப்பர்ஹிட் படம் ஒன்றை பிரபல நடிகர் பிரதீப் ரங்கநாதன் சூறா2 எனக் கலாய்த்து இருக்கும் ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக ஹிட்டடித்தவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி நடிப்பில் இப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் லவ்டுடே என்ற படத்தினை இயக்கி அதில் நடிக்கவும் செய்தார்.
படம் மிகப்பெரிய அளவில் சூப்பர்ஹிட் அடித்தது. சிறிசு முதல் பெரியவர்கள் வரை படம் பல கோடி வசூல் செய்தது. இப்படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்கநாதன் மீது நம்பிக்கை வைத்து அவரின் அடுத்த படமான ட்ராகன் படத்தினை தயாரிக்கவும் முன்வந்தனர்.
நேற்று வெளியான இப்படத்தினை பிரபல இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இத்திரைப்படம் முதல் ஷோவில் இருந்து தற்போது வரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் டைரக்ஷனில் அஸ்வத் மாரிமுத்து ரசிகர்களிடம் ஹிட்டடித்து இருக்கும் நிலையில் அவரின் அடுத்த படமான சிம்பு51 எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.
பிரதீப் ரங்கநாதனும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை குவித்துள்ள நிலையில் அவரின் அடுத்த படமான எல்ஐகேவிற்கு எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. பொதுவாக பிரதீப் ரங்கநாதன் தனக்கு தோன்றுவதை அப்படியே பேசும் குணம் கொண்டவர். அப்படி அவர் பேசிய நிறைய விஷயங்கள் வைரல் ஆவது வழக்கம்.
அந்த வகையில், பிரபல யூட்யூப் விமர்சகர் இட்ஸ் பிரசாந்த் தன்னுடைய ட்விட்டரில் ஜில்லா படம் குறித்து பாராட்டி ட்வீட் போட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் அடப்பாவி சுறா2 டப்பிங் மாதிரி இருந்துச்சுடா. உன்னுடைய டேஸ்ட் குறித்து எனக்கு தெரியும். மிஸ்டர் சுறா ஃபேன் எனக் கலாய்த்து இருப்பார்.
பிரதீப் ரங்கநாதனை ரசிகர்கள் புகழ்ந்து வரும் நிலையில் அவருடைய இந்த ட்வீட் வைரலாகி வரும் நிலையில் விஜய் ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொள்ள தொடங்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.