டிராகன் ஹிட்டுக்கு பின் எகிறிய பிரதீப் மார்கெட்!.. கை வசம் இவ்வளவு படங்களா?!..
Pradeep Ranganathan: கோமாளி படம் மூலம் இயக்குனராக பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். அதன்பின் 3 வருடங்கள் எடுத்துகொண்டு ஒரு கதையை எழுதி அவரே ஹீரோவாக நடித்தார். அப்படி வெளியான லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. 10 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 கோடி வரை வசூல் செய்து பலரையும் வாயை பிளக்க வைத்தது.
டிராகன் ரிலீஸ்: அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எ.ஐ.கே மற்றும் ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என இரண்டு படங்களில் நடிக்க துவங்கினார் பிரதீப். இதில், டிராகன் படம் வேகமாக முடிந்து நேற்று ரிலீஸ் ஆகிவிட்டது. டிரெய்லரில் வந்த சில காட்சிகள் டான் படத்தை நினைவுபடுத்தினாலும் படம் பார்க்கும்போது யாருக்கும் அந்த எண்ணம் வரவில்லை.
டிராகன் பட கதை: கல்லூரியில் படிக்கும்போது பொறுப்பில்லாமல் சுற்றும் ஒருவன், வேலைக்கு செல்லும்போது என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை சுவாரஸ்யமாக கதை சொல்லி இருக்கிறார் அஸ்வத் மாரிமுத்து. அதோடு ஓ மை கடவுளே படத்தில் வருவது போல ஒருத்தருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பது போல கதையை அமைத்திருக்கிறார்.
இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோய்விட்டது. அதோடு இந்த படத்தில் அனுபமா, மிஷ்கின், கவுதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் என பலருக்கும் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நேற்று காலை முதல் காட்சி முடிந்தவுடனயே பாசிடிட்டிவான விமர்சனங்கள் வர துவங்கியது. அதன்பின் படம் ஹிட் என்பது உறுதியாகியுள்ளது.
தொடர் ஹிட்: தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் பிரதீப்பை நம்பி படமெடுக்கலாம் என்கிற நம்பிக்கை பல இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வந்திருக்கிறது. விக்னேஷ் சிவனின் எல்.ஐ.கே, சூரரைப்போற்று பட இயக்குனர் சுதா கொங்கராவின் உதவியாளர் கீர்த்திசுரேஷ் இயக்கத்தில் ஒரு படம் என நடித்து வருகிறார்.
மேலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் மீண்டும் பிரதீப் நடிக்கும் படமும் உருவாகவுள்ளது. சிம்புவின் 51வது படத்தை முடித்தபின் அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், பிரதீப்பும் சில கதைகளை எழுதி வருகிறார். மொத்தத்தில் லவ் டுடே, டிராகன் போன்ற ஹிட் படங்கள் மூலம் கோலிவுட்டின் ஒரு முக்கிய நடிகராக பிரதீப் ரங்கநாதன் மாறியிருக்கிறார்.